தேசியத் தலைவருக்கு விளக்கு வைக்கத் துடிக்கும் இன்போதமிழ், பொங்குதமிழ் குழுமம்

Pongu Tamizh
பொங்கு தமிழில் தாமரை காருண்யன் எழுதும் தலைவர் பிரபாகரன் வீரச்சாவு குறித்து தொடரும் சர்ச்சை: காரணங்கள் எவை? கட்டுரைத் தொடரை அக்கறையுடன் படித்துவருபவன் என்கிற வகையில், இவ்வாரம் வெளிவந்துள்ள 17வது பகுதி பற்றிய என்னுடைய எதிர்வினையை இங்கே பதிகிறேன்.

முதலில் இந்தப் புனைபெயரில் மறைந்திருக்கிறவர் யார் என்பது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. ஆகையால் பெண்ணோ, ஆணோ, இரண்டில் அடங்காத ஒருவரோ, அவர்மீது எனக்கு தனிப்பட்டரீதியில் எவ்வித விருப்பு வெறுப்புகளும் இல்லை. எழுதுபவர் யார் எனத் தெரியாது விட்டாலும் எழுதுபவரின் நோக்கம் என்ன என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது என்பதை குறிப்பிட்டேயாக வேண்டும்.

இவ்வாரத் தொடர், 'தலைவர் பிரபாகரன் வீரச்சாவு குறித்து தொடரும் சர்ச்சை: காரணங்கள் எவை?' என்ற தலைப்பில் அமைந்திருக்கிறது.

இதுபோன்று குறைந்தது மூன்று கட்டுரைகள் ஒரே காலப்பகுதியில், அதாவது இவ்வாரம் வெளிவந்திருக்கின்றன.

ஒவ்வொன்றும் வெவ்வேறு புனைபெயர்களில் எழுதப்பட்டிருக்கின்றபோதும் அவற்றின் சாராம்சம் ஒன்றாகவே இருந்தது. சொந்தப்பெயரில் எழுதுவதற்கு இவர்களுக்கு துணிவு வரவில்லை என்பதிலிருந்து இவர்களின் தாற்பரியம் மட்டும் புரிகிறது.

தாமரையின் கட்டுரைத் தலைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது போன்று, மற்றைய கட்டுரைகளும், தேசியத்தலைவர் அவர்கள் வீரசாவடைந்து விட்டாராம், ஆனால் அவரது சாவினை வேண்டுமென்று, தமது சுயலாபத்திற்காக சிலர் அதனை மறைத்து வைத்துள்ளார்களாம், தேசியத்தலைவருக்கு மரியாதை வணக்கம் செலுத்தக் காத்திருக்கும் கணிசமான மக்கள் அதற்கான சூழல் இல்லாமையால் தமது உணர்வுகளை அடக்கிக்கொண்டிருக்கிறார்களாம், இவற்றினைப் பொறுக்க முடியாத மக்கள் நலன் விரும்பிகள் இவ்வாறு பொருமி வெடிக்கிறார்களாம் என்பதாகவிருந்தன.

இவை தேசியத்தலைவர் மீதுள்ள அபிமானத்தில் எழுதப்பட்டனவா அல்லது வேறுயார் மீதாவது பழி தீர்க்க எழுதப்பட்டனவா என்பதை தாமரையின் கட்டுரையை தொடர்ந்து படித்தால் விளங்கிவிடும். தங்களை உருமறைப்புச் செய்துகொண்டு, மார்க் அன்ரனி, சீசரின் மரணவிட்டில் பேசியது போன்று வஞ்சகப் புகழ்ச்சியாக தலைவரைப்பற்றி எழுதத் தலைப்பட்டுள்ளார்கள்.

தேசியத்தலைவர் வீரச்சாவடைந்ததாக தாங்கள் நம்புவதற்கு, மதிப்புக்குரிய சட்டவறிஞர் சத்தியேந்திரா துணைக்கு அழைப்பட்டுள்ளாரே தவிர, தனது பக்க நியாயத்தை விளக்க குறைந்தபட்ச முயற்சியைக்கூட தாமரை மேற்கொள்ளவில்லை. தேசியத்தலைவர் வீரமரணமடைந்திருந்தால், அது எப்போது, எவ்வாறு நடந்தது என்பது பற்றி எதனையும் அவர் குறிப்பிடவில்லை. அவரது கட்டுரையை படிப்பவர்களும் அது பற்றி அறிந்துகொள்ள ஆவலாக இருக்க மாட்டார்கள் என்ற அனுமானத்திற்கு தன்னிச்சையாகவே தாமரை வந்து விடுகிறார்.

'பிரபாகரன் அவர்களது வீரச்சாவினை ஏற்று - ஒரு போராளியாக - ஈழத்தமிழர் தேசத்தின் தலைவராக - தனது சரிகளோடும் தவறுகளோடும் அவர் வாழ்ந்த ஏறத்தாழ 4 தசாப்த கால போராட்ட வாழ்வுக்கு, இக் கட்டுரை மதிப்பளிக்கிறது' இவ்வாறு கட்டுரையாளர் தேசியத்தலைவருக்கு தனது வணக்கத்தை செலுத்துகிறார். 'தவறுகளோடும்' வாழ்ந்த பிரபாகரனுக்கு கட்டுரையாளர் பரந்த மனப்பான்மையுடன் வணக்கம் செலுத்த துடித்துக் கொண்டிருக்கையில், பிரபாகரனது சரிகளுக்காகவே அவரை ஆதர்சமாய் நேசிக்கிற இலட்சக்கணக்கான மக்கள் வணக்கம் செலுத்தப் பின்னடிக்கிறார்களாம்.

ஒருவேளை நன்றி கெட்டவர்களோ, இந்த மக்கள்?

இங்கே யார் எங்கே நிற்கிறார்கள் என்பதை தாமரையின் கட்டுரையை வாசிப்பவர்கள் இலகுவில் புரிந்து கொள்ளலாம். அதனை மறைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளும் சாமர்த்தியமும் அவரது கட்டுரையில் வெளிப்படவில்லை.

தேசியத் தலைவர் உயிருடன் இருக்கிறாரா, இல்லையா என்ற கேள்விக்கு இவற்றில் ஒன்றையாவது நிருபிக்க முடியாதவர்கள் பதிலளிக்க முடியாது. ஆனால் அதற்கான விடைதெரியாமல் அடுத்த கட்டத்திற்குச் செல்ல முடியாது என்ற கையறு நிலை இங்கு இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

வேண்டுமானால் இந்த இரண்டில் ஒன்றை தேரந்தெடுத்துக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்தில் சிலர் தவித்துக்கொண்டு இருக்கலாம். தேசியத்தலைவரின் வழிகாட்டல் இல்லாமலே செயற்படக்கூடிய ஆற்றல் தமிழ்மக்களுக்கும், தமிழ்த்தேசியவாதிகளுக்கும் இருக்கிறது என்பது மட்டும் நிதர்சனம்.

தேசியத்தலைவர் பிரபாகரன் என்பவர் இதிகாசங்களில் குறிப்பிடப்படுவது போன்ற ஒரு அவதாரம் இல்லை, அவர் சூரியத்தேவனும் இல்லை, குறைந்தபட்சம் அவர் எதிரிகளின் எல்லாத் தாக்குதல்களையும் எதிர்கொண்டு, வீழ்ந்துவிட்டு ஆக்ரோசமாக எழுந்துநிற்கும் செலுலொயிட் கதாநாயகனும் இல்லை. சாதாரண மனிதரைப்போல் அவருக்கு மூப்பு, நோய் வாய்ப்படல், மரணம் எல்லாமே நிட்சயமானதாக இருக்கிறது. ஆகவே மின்னல் மாயாவிக் கதைகளை நம்பி இங்கு யாரும் வாழாதிருக்கவில்லை.

அவர் ஒரு மனிதன், போராளி, விடுதலைவேண்டி நிற்கும் ஒரு இனத்தின் தலைவன். சுருங்கச் சொன்னால் இந்த நூற்றாண்டில் வாழும் ஈடுசெய்ய முடியாத ஒரு தமிழன். அவர் வாழ்ந்தாலும், இறந்தாலும் தமிழ் மக்களின் மனங்களிலிருந்து அவரை இலகுவில் பெயர்த்தெடுக்க முடியாது.

இன்னும் பலதலைமுறை பிரபாகரன் என்ற பெயரை உச்சரித்தே உரம்பெறப் போகிறது.
அவர் வீரச்சாவடைந்து விட்டாரெனின் ஒரு சுட்டி விளக்கை எரித்து, அல்லது மலர்கொண்டு வணங்கி விட்டு, சடங்கு முடிந்துவிட்டதென்று அடுத்த காரியத்திற்கு போவதற்கு, இது ஒரு சாதாரண மனிதனின் மரணமல்ல.

அவர் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர் ஏற்றிய விடுதலைத் தீபத்தை அணையவிடாமல் பாதுகாத்தலில் மட்டுமே நன்றியறிதலும், பட்ட கடன் தீர்த்தலும் அடங்கியிருக்கின்றன என்பதனை அவரை நேசிப்பவர்கள் அறிந்து வைத்திருக்கிறார்கள். இதில் அவர்களிடம் எவ்வித குழப்பமுமில்லை.

எங்கள் தேசத்தைப் பற்றி, எமது அரசியல் அபிலாசைகள் பற்றி, விட்டுகொடுக்காத இறைமை பற்றி மிக விளக்கமாகவே அவர் பேசியிருக்கிறார். நாமும் புரிந்து வைத்திருக்கிறோம்.

சத்திய வேள்வியினை நடாத்திக் காட்டியிருக்கிறார். அவரைப் பின்தொடர ஆயிரமாய், இலட்சமாய் மக்கள் இருக்கிறார்கள். கிடைக்கும் சந்தர்ப்பங்களை பயன்படுத்திக்கொண்டு பற்ருறுதியுடன் செயற்பட்டால் அதுவே அவருக்கு செய்யும் நன்றிக் கடனாக அமையும்.


தமிழ் மக்களின் இதயத்தில் வாழ்பவரை வெளியேற்றி விட்டு வெறொருவரை அரியாசனம் ஏற்றலாம் என்ற கனவில் மிதப்பவர்களின் மேலான கவனத்திற்கு:

தேசியத்தலைவர் என்பவர் ஒருநாளில் உருவாகமாட்டார். விரைவாகத் தயாரிக்க இதுவொன்றும் இன்ஸ்ரன்ற் உணவுப் பொட்டலமல்ல. ஆனால் அதற்கான முயற்சிகளில் ஈடுபடும் உரிமை எல்லோருக்கும் உண்டு. முயன்று பாருங்கள். தான்மையை அழித்து, தன்னை உருக்கி சத்தியவேள்வியை நடாத்துவது என்பது அப்படியொன்றும் இலகுவானதில்லை என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும்.

முடியாவிட்டால் விட்டுவிடுங்கள். வஞ்சகப் புகழ்ச்சிகள் வேண்டாம், அவர் மூட்டிய நெருப்பு உங்களைச் சுட்டெரித்துவிடும், கவனம்.

கோபி

---------------------------------------
இறுதி யுத்தத்தின் முடிவும் தலைவரின் இறுதி வியூகமும் -காணொளிகள்


--------------

யாழ் இணையத்தில் எழுதப்பட்ட கருத்துக்கள் சில

karu
----------------------
ஒரு நோயாளியை அவன் செத்துப் போனான் என்று டாக்டர் சொல்ல ஸ்டெச்சரில் வைத்துப் பிரேத அறைக்குப் பணியாளர்கள் கொண்டு சென்றார்களாம். இடையில் விழித்துக்கொண்ட நோயாளி என்னை எங்கே கொண்டு செல்கிறீர்களென்று கேட்டிருக்கிறான்.

துக்கிக் கொண்டு சென்றவர்கள் உன்னைப் பிரேத அறைக்குக் கொண்டு செல்கிறோம் என்றிருக்கிறார்கள். உடனே அவன் அட அனியாயமே நான் இன்னும் சாகவில்லையடா என்றிருக்கிறான். அதற்குப் பணியாளர்கள் முட்டாளே பேசாமல் படு,

டாக்டரைவிட நீ என்ன பெரிய அறிவாளியா என்று அதட்டியபடி அவனைக் கொண்டு சென்றார்களாம்.

தேசியத்தலைவருக்குப்பிறகு அவர் வழிநடத்திய விடுதலைப் புலித்தலைவர்கள் உட்படப் பலர் இன்னும் உயிரோடு இருக்கிறார்கள். பொட்டம்மான், சூசை போன்றவர்கள் பற்றி யாரும் ஆய்வு செய்வதாகத் தெரியவில்லை. அத்தகையவர்களிடமிருந்து சரியான தகவல்கள் கிடைக்கும்வரை தலைவர் செத்துப் போனாரா இல்லையா என்ற முடிவை டாக்டரைப் போலவும் பணியாளர்களைப் போலவும் முடிவெடுத்து கதிரையிலிருந்து கம்பியூட்டரில் பிதற்றும் இத்தகைய கட்டுரையாளர்களிடமிருந்து பெறமுடியாது.

ஒருவன் செத்துப் போனானா இல்லையா என்று தீர்மானிக்க இந்தளவு நீள நீளமான பிதற்றல்கள் தேவையில்லை. தகுந்த சாட்சியங்களோடு அவர் முடிந்தார் என்றால் போதும்.

யார் எதைச் சொன்னாலும் எம்போன்ற அரசியல், சுயலாப நோக்கற்ற சாமானியார்களுக்கு தேசியத் தலைவர் உயிரோடு இருக்கிறார் என்ற நம்பிக்கையே மேலோங்கியிருக்கிறது.

முடிந்தால் நீளநீளமான கட்டுரைகளைவிட்டு உரிய மறுக்க முடியாத ஆதாரங்களோடு உங்கள் சாட்சியங்களை முன்வையுங்கள். இலங்கை அரசாங்கம் காட்டிய படங்களை இங்கு யாரும் எதிர்பார்க்கவில்லை. இது அமெரிக்கனின் பறக்கும் தட்டுப் புரளியை நம்பச் சொல்வது போன்றது.

ஒன்றுக்கும் அவசரப்படத் தேவையில்லை. காலமிருக்கிறது. செத்தவர் வந்து சொல்ல வேண்டுமென்று முட்டாள்தனமாக யாரும் எதிர்பார்க்கவில்லை.

கூடநின்று பார்த்தவர்கள் வந்து சொல்லட்டும். அவர்களில் பலர் இன்னும் உயிரோடு இருக்கிறார்கள். அதற்குள் ஏன் பலரும் அவசரப்பட்டு திதி வைக்கவேண்டு மென்று ஆசைப்படுகிறீர்கள்.

அப்படிச் செய்வதால் ஒன்றையும் நாம் சாதிக்கப் போவதுமில்லை, செய்யாமல் விடுவதால் ஒன்றும் குடிமுழுகிப்போகப் போவதுமில்லை.

ஆடத் தெரியாதவள் மேடை கோணல் என்று சொல்வதைப் போல மக்களை மீண்டும் ஒன்று திரட்டி தமிழ்த் தேசியத்தை மீண்டும் முன்னெடுக்க முடியாதநிலையில் தலைவர் இருக்கிறாரென்ற நம்பிக்கையால்தான் எல்லாமே கெட்டுப் போகிறதென்று இயலாத்தனமாகக் கூக்குரலிடுவதில் அர்த்தமில்லை.

---------------------------
Tamil Nation இணையத்தின்* ஆசிரியரும் அறிஞருமான திரு நடேசன் சத்தியேந்திரா அவர்கள் பிரபாகரனின் மறைவுக்கு மரியாதை செலுத்தி தனது இணையத்தளத்தை 30 நாட்கள் மூடி வைத்திருந்தார். இது குறித்து தனது இணையத்தில் அவர் 18.06.2009 அன்று பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

சத்தியேந்திரா என்ன தலைவரின் மெய்ப்பாதுகாவலரா ?
அல்லது இறுதி வரை முள்ளிவாய்க்காலில் நின்று விட்டு வந்தவரா ?
அல்லது தேசியத் தலைவரை பிரேதப் பரிசோதனை செய்து விட்டு வந்த வைத்தியரா ?

சத்தியேந்திரா அறிஞர் என்பதிற்காக அவரின் வாக்கை வேதவாக்காகக் கொள்ளும் தாமரை காருண்யன் ஒரு அதிமேதாவி அருவருடி தான்
----------------------------------------------

முள்ளிவாய்க்கால்: அழிவுகளின் முடிவு அல்ல அவலங்களின் திறவுகோல் பாகம் 8 [ ஞாயிற்றுக்கிழமை, 23 மே 2010, 10:46.46 பி.ப | இன்போ தமிழ் ]
-தொல்காப்பியன்-
அந்த இறுதிக்கணங்களில் என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாது.?

என்று தானே எழுதி விட்டு எல்லாம் தமக்குத் தெரிந்தது போல் -தொல்காப்பியன்- எழுதிவருவதன் உள்நோக்கம் என்ன என்பதைப் புரிந்து கொள்ளுங்கள் ?

முற்றுகையை உடைத்து வெளியேற முனைந்த சமரில் ஒவ்வொரு தளபதியாக வீழ்ந்து போன நிலையில் தேசியத் தலைவரும் வீரச்சாவை தழுவிக்கொண்டார்

சுவிஸ் கிருஸ்ணா அம்பலவாணர் தான் இந்தப்பெயரில் எழுதிவருவதாக சொல்லப்படுகின்றது
---------------------------------------------------

[infotamil.jpg]
படங்கள் சொல்லும் செய்தி என்ன ?

எம் மீதான இன்போதமிழ் குழுமத்தின் வன்மம் பகுதி 2 -இப்போது வலைப்பூவில் தொடர்கின்றது

எம்மீது இன்போதமிழின் இப்படியும் ஒரு வன்மம்

உருத்திரகுமாரின் "ஊருக்கு உபதேசம் உனக்கில்லை" புதினப்பலகை கண்ணே ?

----------------------------------------------------------------

"தலைவர் பிரபாகரன் தப்பிச் சென்றால் " அது ஈனச்செயலா ? ஈழநாடு பத்திரிக்கையின் பச்சோந்தித் தனம்


ஈழநாடு பத்திரிக்கையின் பச்சோந்தித் தனம் பகுதி 2

-----------------------------------------------------------------------------

Comments