இனக்கொலையாளியின் ஒப்புதல் வாக்குமூலம்!
Posted by எல்லாளன் அம்பலம், அரசபயங்கரவாதம், ஈழம் 10:18 AM
webdunia photo
FILE![[sri_bus_564406a.jpg]](http://1.bp.blogspot.com/_0IDxQwJFnr0/SpOuOmXVFcI/AAAAAAAAAYY/jG_U61xEc3I/s1600/sri_bus_564406a.jpg)
சிறிலங்க அரசின் அயலுறவுச் செயலராக இருந்த பலித கோஹனாவின் ‘திறனை’ மெச்சி அவரை ஐ.நா.விற்கான நிரந்தரத் தூதராக நியமித்துள்ளார் சிறிலங்க அதிபர் மகிந்த ராஜபக்ச.
கொழும்புவில் இருந்து வெளிவரும் டெய்லி மிர்ரர் நாளிதழிற்கு அளித்த பேட்டியில், "வரலாற்றைப் பாருங்கள், போரில் தோற்றவர்கள்தான் போர் குற்றங்கள் புரிந்ததாக தண்டிக்கப்பட்டுள்ளார்கள்" என்று பலித கோஹனா கூறியுள்ளார்.
இப்படிக் கூறியதின் மூலம் தமிழர்களுக்கு எதிராக நடத்திய போரில் சிறிலங்க அரசும், அதன் படைகளும் போர் குற்றம் புரிந்தன என்பதை அவர் ஒப்புக் கொண்டுள்ளார். அப்படிபபட்ட போர் குற்றங்களை இழைத்ததற்காக எங்களை யாரும் தண்டிக்க முடியாது என்று பெளத்த சிங்கள மேலாதிக்கத் திமிருடனேயே அவர் பேசியுள்ளார்.
“போரில் வெற்றி பெற்றவர்களையும் அக்குற்றத்தின் கீழ் தண்டிக்க வேண்டும் என்றால் அதனை துவக்க வேண்டிய இடம் வேறொங்கோ உள்ளது” என்று கூறியவர், அது எந்த இடம் எது என்பதையும் சுட்டிக்காட்டாமல் விடவில்லை.
“போரின் போது நாங்கள் அணு குண்டைப் போடவில்லை, நகரங்களை அழிக்கவில்லை” என்று அந்தப் பேட்டியில் கூறியுள்ளார் கோஹனா.
அதாவது தமிழ் மக்களை அழித்தது உண்மை, ஆனால் அணு குண்டை போட்டு பெரிய அழிவை ஏற்படுத்தவில்லை. மக்களை அழித்தோம், அவர்களின் இல்லங்களை நிர்மூலமாக்கினோம், ஆனால் அவர்கள் வாழ்ந்த இடங்கள் அப்படியே இருக்கின்றன.
அமெரிக்காவைப் போல் நாங்கள் அணு குண்டையா போட்டோம், நாகசாகி, யூரோஷிமா ஆகியவற்றை அழித்தது போல நகரங்களையா அழித்து நிர்மூலமாக்கினோம்?
என்று பெயரைக் குறிப்பிடாமல் சுட்டிக்காட்டி, அதற்கு அமெரிக்காவை தண்டிக்க தவறிய சர்வதேசம், அப்படி எதையும் செய்யாத எங்களை தண்டித்து விடுமா என்ன? என்று கேட்டுள்ளார் பலித கோஹனா.

FILE
பலித கோஹனாவின் பேட்டியில் இருந்து மற்றொன்றையும் புரிந்துகொள்ள வேண்டும். இரண்டாவது உலகப் போரில் இரண்டரைக் கோடி யூதர்களை கொன்று குவித்தது ஹிட்லரின் நாஜி அரசு. ஆனால் அது தோற்றதால்தான் தண்டனைக்குள்ளாக்கப்பட்டதே தவிர, யூதர்களை இனப் படுகொலை செய்ததால் அல்ல என்று ஒரு காட்மிராண்டித்தனமான தர்க்கத்தை மறைமுகமாக வைக்கிறார் கோஹனா.
ஐ.நா.வும், அதன் மனித உரிமை மன்றமும் முன்மொழிந்து உலக நாடுகளின் ஆதரவுடன் ஏற்க்கப்பட்ட இனப் படுகொலைக்கு எதிரான சர்வதேச உடன்படிக்கையை, அந்த உடன்படிக்கைக்கு ஏற்பளித்த ஒரு நாட்டின் ஐ.நா.விற்கான தூதர், ‘தோற்றதால்தான் இனப் படுகொலைக் குற்றத்திற்காக நாஜிக்கள் தண்டிக்கப்பட்டனர்’ என்று கூறுவதில் இருந்து தமிழர்களுக்கு எதிரான சிறிலங்க அரசின் பெளத்த சிங்கள இனவாத மனப்பாங்கை இதற்கு மேலாகவாவது உலக நாடுகள் புரிந்துகொள்ள வேண்டும்.
ராஜபக்ச அளித்த ஒப்புதல் வாக்குமூலம்

FILE
அந்தப் பேட்டியில் மக்கள் பாதுகாப்பு வலயத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் திட்டமிட்டத் தாக்குதலே என்று ராஜபக்ச கூறியிருந்தார். அவர் ஆங்கிலத்தில் கூறியது இதுதான்:
The No-Fire Zones were all announced by the armed forces. After Kilinochchi, they were saying: “No-Fire Zones, so go there.” So all of them [the LTTE leaders and fighters] went there. These were not areas demarcated by the U.N. or somebody else; they were demarcated by our armed forces. The whole thing was planned by our forces to corner them.
“விடுதலைப் புலிகளை சுற்றி வளைக்கவே பாதுக்காப்பு வலயங்களை (No Fire Zone) உருவாக்கினோம். அதன் மீது தாக்குதல் நடக்காது என்று நினைத்து விடுதலைப் புலிகளின் தலைவர்களும், போராளிகளும் சென்றனர். இப்பகுதியை உருவாக்கியது ஐ.நா.வோ அல்லது உலக நாடுகளோ அல்ல, எங்களது இராணுவம்தான். அவர்களை சுற்றி வளைக்கவே இவ்வாறு திட்டமிட்டோம்” என்று ராஜபக்ச கூறியிருந்தார்.
விடுதலைப் புலிகளை சுற்றி வளைக்க பாதுகாப்பு வலயங்களை உருவாக்கியதாகக் கூறுகிறார். ஆனால் அங்கு சென்று தஞ்சமடைந்தவர்கள் நிராயுதபாணியான பொதுமக்கள்தான் என்பதும், அதனை அறிந்திருந்தும் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியதும் போர் குற்றம் அல்லவா?
பாதுகாப்பு வலயப் பகுதியில் தஞ்சமடைந்த மக்கள் அனைவரும் (3,30,000 பேர்) விடுதலைப் புலிகள் என்று எப்படி முடிவு செய்தீர்கள் என்று அந்தப் பத்திரிக்கையாளர் கேள்வி கேட்கவில்லை, ஏனென்றால் அவர் ராஜபக்சயின் விசுவாசி.

FILE
எனவே ராஜபக்ச சகோதரர்கள் மட்டுமில்லை, சிறிலங்க அரசின் அதிகார வர்க்கமும் அவர்களுக்குள்ள அதே பெளத்த சிங்கள மேலாதிக்க வெறித்தனத்துடன்தான் தமிழின இனப் படுகொலையில் ஈடுபட்டுள்ளது பலித கோஹனாவின் பேட்டியில் இருந்து உறுதியாகிறது.
அரசியல் தீர்வை மறுக்கும் ஆணவம்!
“தமிழர்களின் இனப் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காண வேண்டியதற்கு என்ன தர்க்க அடிப்படை உள்ளது என்பது தனக்கு விளங்கவில்லை” என்றும் அப்பேட்டியில் கூறியுள்ள பலித கோஹனா, “இலங்கையில் வாழும் தமிழர்களில் 54 விழுக்காட்டினர் கொழும்புவைச் சுற்றித்தான் வாழ்கின்றனர். வடக்கில் ஒட்டு மொத்தமாக ஏழரை இலட்சம் தமிழர்கள்தான் வாழ்கின்றனர். இவர்களில் வன்னியில் மூன்று இலட்சம் பேர் உள்ளனர், அவர்களும் முகாம்களில் உள்ளனர். வன்னிக்கு வெளியே ஒருவரும் இல்லை. மற்ற இடங்களில் வாழ்பவர்களோடு ஒப்பிட்டால் யாழ்ப்பாணத்தில் வாழ்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. எனவே இவர்களுக்காக அரசியல் தீர்வு எதுவும் தேவையில்லை” என்கிறார் பலித கோஹனா.
பலித கோஹனாவின் பேட்டியைப் படிக்கும் தமிழரல்லாதவர் எவரும் கூட அவர் கூறுவது நியாயம்தானோ என்றே எண்ணத் தோன்றும். இவர் கூறும் கணக்கு இன்றைய கணக்கு! 1948ஆம் ஆண்டில் இலங்கை வெள்ளையனிடமிருந்து விடுதலைப் பெற்றதே அப்போது எவ்வளவு தமிழர்கள் எங்கெங்கு இருந்தார்கள், அவர்களின் மக்கட் தொகை எவ்வளவு? சிங்களவர்களின் எண்ணிக்கை என்ன, அவர்கள் எங்கெல்லாம் வாழ்ந்தார்கள்? என்பதைப் பார்த்தால் தெரியும், அரசியல் தீர்விற்கான அவசியம்.
கூட்டுப் பண்ணைத் திட்டம் என்று கூறி சிங்களர்களைக் கொண்டு வந்து தமிழர்கள் பகுதியில் குடியேற்றியது, தமிழர்கள் பகுதியில் கலவரங்களைத் தூண்டி விட்டு தமிழினப் படுகொலையை திட்டமிட்டு தொடர்ந்தது. தமிழர்களின் தாயகமான வடக்கிலும் கிழக்கிலும் விமானங்களைக் கொண்டு கடந்த 30 ஆண்டுகளாக குண்டு வீசி கொன்றது, அங்கு வாழ்ந்து வந்த பல இலட்சக்கணக்கான மக்கள் உயிர் பிழைத்து வாழ வழி தேடி உலகெங்கும் அகதிகளாக விரட்டப்பட்டது என்று ஒரு நேரத்தில் இலங்கையின் மக்கட் தொகையில் சற்றேறக்குறைய 45 விழுக்காடு இருந்த தமிழர்கள் இன்று 16 விழுக்காடு அளவிற்கு குறைக்கப்பட்டுள்ளனர்.
அதற்கு நேர் எதிராக சிங்கள மக்கட் தொகை பெருகி இன்று 66 விழுக்காட்டினர் அவர்களே என்ற நிலை ஏற்பட்டுள்ளது! மக்கட் தொகைக்கு ஏற்றவாறு நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையும் சிங்களப் பகுதியிலேயே பெருகியது. இலங்கை நாடாளுமன்றத்தின் உறுப்பினர்கள் எண்ணிக்கை எப்படி வளர்ந்தது(?) என்பதை கவனித்தால் இந்த இன அழிப்பின் அடிப்படை புரியும்.
பெளத்த சிங்களர்களை பெரும்பான்மையாக்கி, அதன் மூலம் இலங்கையை ஒரு பெளத்த சிங்கள நாடாக மாற்ற வேண்டும் என்ற திட்டத்தின் கீழ்தான் தமிழர் இனப் படுகொலை நடத்தப்படுகிறது என்பது உலக நாடுகளுக்கு புரியாமல் இருக்கலாம். இந்தியா, சீனா போன்ற தெற்காசிய வல்லரசுகளுக்கு அந்த உண்மை தெரிந்திரிந்தும் கண்களை மூடிக்கொண்டு தங்களின் ‘அரச நலனை’ காப்பாற்றிக் கொள்ளலாம். ஆனால் இது தமிழர்கள் அனைவரும் அறிந்த உண்மை. வரலாற்றாளர்கள் அறிந்த உண்மை.

FILE
இந்த உண்மைகளையெல்லாம் மறைத்துவிட்டு, ஏதோ இவருக்கு மட்டுமே தர்க்கவாதம் தெரியும் என்பதுபோல, கொழும்புவைச் சுற்றிலும் 54 விழுக்காடு மக்கள் இருக்கிறார்கள் என்று பேசுகிறார் பலித கோஹனா! தமிழர்கள் வாழும் பகுதிகள் மீதெல்லாம் குண்டு வீசிகிறீர்கள், கொழும்புவில் உள்ள தமிழர் பகுதிகளில் அப்படி குண்டுகள் வீசிவீர்களா? முடியாது. ஏனென்றால் அது சிங்களவன் தலையிலும் விழுமே, அதனால்தான் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள கொழும்புவில் வந்து வாழ்கிறான் தமிழன். அப்படிப்பட்டவனையும் காலி செய்து அனுப்ப நடத்தப்பட்டதுதானே 1983 உட்பட பல முறை நடந்தேறிய இனக் கலவரங்கள்?
வடக்கில் தமிழர்கள் மீது இனப் படுகொலைப் போர் நடந்துகொண்டிருந்தபோது கொழும்புவில் வாழந்துவரும் தமிழர்களை பாதுகாப்பு காரணங்களுக்கான என்று கூறி வெளியேற்ற முயற்சித்ததே சிறிலங்க அரசு? மறுக்க முடியுமா? அந்த நடவடிக்கையை மற்ற நாடுகள் கடுமையாக கண்டித்ததால் நிறுத்திக் கொண்டது.
இன்றும் தொடரும் இனப் பாகுபாடு (Racial Discrimination)!
போர் முடிந்துவிட்டது, புலிகளை அழித்துவிட்டோம் என்று கூறும் சிறிலங்க அரசு, இன்றும் தனது தமிழின விரோத நடவடிக்கையை கைவிடவில்லை என்பதற்கு இன்றும் பல உதாரணங்கள் உள்ளன.
கொழும்புவில் உள்ள தமிழ் வாணிகர்களை அவர்கள் செய்யும் வாணிகத்திலிருந்தே விரட்ட, சி்ங்கள வாணிகர்களுக்கு வரிச் சலுகையும், தீர்வைச் சலுகையும் வழங்க சிறிலங்க அரசு முடிவெடுத்துள்ளது.
சிறிலங்க அரசின் இப்படிப்பட்ட இனவாத சதிகளை உணர்ந்த தமிழ் வாணிகர்கள் கொழும்புவில் இருந்து வெளியேறுக்கின்றனர் என்றும், அவர்கள் வெளியேறுவதையே சிறிலங்க சிங்கள இன வெறி அரசு விரும்புகிறது என்றும் அங்கிருந்தும் வரும் செய்திகள் கூறுகின்றன.
சர்வதேசம் விழித்தெழ வேண்டும்!
இப்படிப்பட்ட இன வெறி அரசை, அது தமிழர்கள் மீது நடத்திய இனப் படுகொலைக்காகவும், போர் குற்றத்திற்காகவும், அவர்களின் அடிப்படை உரிமையற்றவர்களாக்கி வதைத்த மானுடத்திற்கு எதிராக குற்றச் செயல்களுக்காகவும், சொந்த நாட்டு மக்களை காப்பாற்றும் பொறுப்பை தட்டிக் கழித்த குற்றத்திற்காகவும் உலக நாடுகள் இணைந்து செயல்பட்டு சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும்.
அந்த விசாரணையில், சாட்சிகளற்ற போர் என்று வர்ணிக்கப்படும் தமிழர் இனப் படுகொலையை நேரில் கண்ட சாட்சிகளாக தற்பொழுது முகாம்களில் முடங்கிக் கிடக்கும் மக்களை விசாரிக்க வேண்டும். உண்மை வெளிவர உலக நாடுகள் ஒன்றிணைந்த செயலாற்ற வேண்டு்ம்.
அவ்வாறு செய்யத் தவறினால் பலித கோஹனா கூறியது போல வெற்றி பெற்றவனை தண்டிக்க திராணியற்றது சர்வதேசம் என்ற கருத்து உண்மையாகும்.
அதுமட்டுமல்ல, முள்வேலி முகாம்களுக்குள் முடங்கிக் கிடக்கும் மூன்று இலட்சம் தமிழர்களையும் தடயமின்றி அழித்தொழித்துவிடும்.
வெப்உலகம்
- children genocide images / சிறார்களின் படுகொலை
- Tamil genocide images 8 /வன்னிப்படுகொலை படங்கள் 8
- Tamil genocide images 7 /வன்னிப்படுகொலை படங்கள் 7
- Tamil genocide images 6 /வன்னிப்படுகொலை படங்கள் 6
- Tamil genocide images 5 /வன்னிப்படுகொலை படங்கள் 5
- Tamil genocide images 4 /வன்னிப்படுகொலை படங்கள் 4
- Tamil genocide images 3 /வன்னிப்படுகொலை படங்கள் 3
- Tamil genocide images 2 /வன்னிப்படுகொலை படங்கள் 2
- Tamil genocide images 1 /வன்னிப்படுகொலை படங்கள் 1
- வன்னி இடப்பெயர்வு அவலம்/vanni display
விடுதலைப் புலிகளின் தியாகம் வீண் போகாது
Posted by எல்லாளன் அம்பலம், அரசபயங்கரவாதம், ஆய்வுகள், ஈழம் 10:01 AM
சிங்களத்தால் பயங்கரவாதி என்று சுட்டிக்காட்டப்படும் ஒவ்வொரு தமிழனும், ஒவ்வொரு தமிழ் யுவதியும் தமிழர்களால் புனிதர்களாகப் பூசிக்கப்படுகின்றார்கள். அவர்களை வீரப் புதல்வர்களாகக் கொண்டாடுகிறார்கள்.
இவர்களது தியாகங்கள் எல்லாம் வீணாகிப் போக ஈழத் தமிழர்கள் யாரும் அனுமதிக்கமாட்டார்கள். இவ்வாறு பாரிஸிலிருந்து வெளிவரும் ஈழநாடு பத்திரிகை “நமது நோக்கு” என்ற ஆசிரியர் தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளது.
கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலான ஆயுதம் ஏந்திய தமிழீழ விடுதலைப் போராட்டம் கசப்பான முடிவுக்கு வந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுவிட்ட போதும், ஈழத் தமிழர்கள் மீண்டும் ஆயுதம் ஏந்தியேயாக வேண்டிய நிர்ப்பந்தத்தையே சிங்கள அரசு திணித்து வருகின்றது.
சிங்கள நரி ஜெயவர்த்தன ஆட்சிக் காலத்தில் தேசியத் தலைவர் அவர்கள் ஒரு நேர்காணலின் போது ‘ஜெயவர்த்தன உண்மையான பெளத்தனாக இருந்திருந்தால் நான் ஆயுதம் ஏந்தவேண்டிய அவசியமே இருந்திருக்காது’ என்று கூறியிருந்தார். இந்த யதார்த்தம் இன்றுவரை அப்படியே தொடர்வதையே காணக்கூடியதாக உள்ளது.
இலங்கையின் ஆட்சியைப் பிடிக்கக்கூடிய எந்த சிங்கள அரசியல்வாதியும் இந்த யதார்த்தத்திற்கு வெளியே வந்தது கிடையாது. வரப்போவதும் கிடையாது. இதுவே ஈழத் தமிழர்கள் தமது தாயகத்தை வென்றெடுக்க வேண்டிய அவசியத்தையும் அவசரத்தையும் அவர்களுக்கு வழங்கி வருகின்றது. மாற்றமே இல்லாத சிங்கள மேலாதிக்க மனப்பான்மையே தமிழர்களை மீண்டும் ஒரு ஆயுத போராட்டத்தை நோக்கித் தள்ளும் என்பது மறுதலிக்க முடியாத யதார்த்தம்.
ஆயுதம் ஏந்திய ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதமாகப் பட்டியலிட்டு, விடுதலைப் புலிகள் மீது தடை விதித்த அமெரிக்கா கூட தற்போது ஈழத் தமிழர்களின் அவலங்களுக்காகக் குரல் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளது. மேற்குலகின் பல நாடுகளும் ஈழத் தமிழர்களுக்கான நிர்ப்பந்தத்தைப் புரிந்து கொண்டுள்ளனர்.
விடுதலைப் புலிகளிடமிருந்து தமிழ் மக்களை மீட்பதற்கான போர் என உலக நாடுகளுக்கு அறிவித்த இலங்கை அரசு, இறுதி யுத்தத்தின்போது தப்பிச் சரணடைந்த தமிழ் மக்களை நடாத்தும் விதம் மனிதாபிமானமுள்ள எந்தச் சமூகத்தினாலும் அங்கீகரிக்க முடியாத கொடுமையாகவே பார்க்கப்படுகின்றது.
இரண்டாவது உலகப் போரின்போது ஜெர்மனிய நாசிப் படைகளும், ஜப்பானியப் படைகளும் தோற்றுப் போன பின்னர் அந்த மக்கள் வெற்றி கொண்டவர்களால் தண்டிக் கப்படவில்லை. மாறாக, அவர்களது மனங்களை வெல்லும் முகமான விரைந்த நிவாரணங்களும், அழிவுகளுக்கான பரிகாரங்களும் வெற்றி கொண்ட தரப்பினால் வழங்கப்பட்டு, அவர்களது அமைதி வாழ்வுக்கு ஊக்கம் கொடுக்கப்பட்டது.
இலங்கையின் நிலவரமோ இதற்கு நேர் எதிராகவே உள்ளது. பல்லாயிரக் கணக்கான தமிழர்களை கொடிய ஆயுதங்கள் கொண்டு சிதைத்துக் கொன்றுவிட்டு, உயிரோடு புதைத்துவிட்டு அதனை வெற்றி விழாவாகக் கொண்டாடியதை ஒட்டுக்குழுவினர்கள் கூட ரசித்து இருக்க மாட்டார்கள். ஒண்டுவதற்கும், புகலிடம் வழங்குவதற்கும் உறவுகள் இருக்கும் நிலையில், கண்ணி வெடிகளைக் காரணம் காட்டி, மூன்று இலட்சம் தமிழர்களை வதை முகாம்களில் வைத்துக் கொடுமைப்படுத்துவதை சிங்களவரைத் தவிர எந்த மனித குலமும் ஏற்றுக் கொள்ளாது.
பிறந்த குழந்தை முதல், இறுதிக் காலத்தில் வாழும் பெரியவர்கள் வரை வவுனியா வதை முகாம்களின் முட்கம்பி வேலிகளுக்குள் வாழ்வைத் தொலைத்துவிட்டு ஏங்கித் தவிக்கின்றார்கள். சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுச் சிறையில் வாடும் ஆயிரக்கணக்கான யுவதிகளும், இளைஞர்களும் எதிர்காலம் தெரியாத இருட்டில் வாழ்கின்றனர்.
வவுனியா முகாம்களிலிருந்து நாளாந்தம் பலர் கடத்தப்பட்டுக் கொண்டு செல்லப்படுகிறார்கள். அவர்கள் திரும்பி வருவார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது.
இந்த அவல வாழ்க்கை தொடரும் நிலையில், இலங்கைத் தீவில் அமைதி என்பது எப்போதுமே சாத்தியம் இல்லை. சிறுபான்மைத் தமிழினத்தின் அவல வாழ்வுக்கு முற்றுப் புள்ளி வைத்து, அவர்கள் கெளரவமாகவும், பாதுகாப்பாகவும் வாழ வகை செய்யப்படாதவரை சிங்களத்தின் வெற்றி என்பது நீண்டு செல்லப் போவதில்லை.
சிங்களத்தின் இனவெறியும், மேலாதிக்க சிந்தனையும் இனிமேலும் மாற்றங் கொள்ளத் தவறினால், தமிழீழக் கருவில் உருவாகும் அத்தனை குழந்தைகளும் விடுதலைப் புலிகளாகவே பிறப்பார்கள் என்பதை சிங்கள தேசம் உணர்ந்து கொள்ள வேண்டும். இல்லை என்று சொல்வதால் மட்டும் நெருப்பு குளிர்ந்துவிடப் போவதில்லை. விடுதலைப் புலிகளை அழித்துவிட்டோம் என்று மார் தட்டுவதால் மட்டும் விடுதலைப் புலிகளை இல்லாமல் செய்து விட முடியாது.

‘விடுதலைப் புலிகள்’ என்பது எதிர்வினை. சிங்கள தேசத்துக் கொடூரங்களின் அறுவடை. சிங்கள அரச பயங்கரவாதத்தின் பிரசவம். தமிழீழ மக்கள் மத்தியில் விடுதலைப் புலிகள் மீண்டும் பலங்கொண்டு எழுவதற்குரிய அத்தனை காரணங்களையும் சிங்கள தேசம் அப்படியே பாதுகாக்கவே விரும்புகின்றது. ஈழத் தமிழர்களுக்கு எதையுமே வழங்காமல், போரின் வெற்றி மூலம் அவர்களை அச்சுறுத்துவதால் மட்டும் அமைதியை ஏற்படுத்திவிட முடியாது.
சிங்களத்தால் பயங்கரவாதி என்று சுட்டிக் காட்டப்படும் ஒவ்வொரு தமிழனும், ஒவ்வொரு தமிழ் யுவதியும் தமிழர்களால் புனிதர்களாகப் பூசிக்கப்படுகின்றார்கள்.
அவர்களை வீரப் புதல்வர்களாகக் கொண்டாடுகிறார்கள். தமிழீழ விடுதலையை வென்றெடுக்க அவதரித்த அக்கினிக் குஞ்சுகளாக அவர்களை நெஞ்சில் சுமக்கின்றார்கள்.
இவர்களது தியாகங்கள் எல்லாம் வீணாகிப் போக ஈழத் தமிழர்கள் யாரும் அனுமதிக்கமாட்டார்கள். முழத்திற்கு ஒரு இராணுவமும், வீதிக்கு ஒரு சோதனை முகாமும் எனப் படை விரிவாக்கம் மட்டுமே ஈழத் தமிழர்களைச் சிறை வைக்கப் போதுமானது அல்ல. இலங்கையில் வாழும் அத்தனை சிங்களவரும் தம் மனச் சிறைகளிலிருந்து வெளியே வரவேண்டும்.
தமிழர்களைச் சக மனிதர்களாகப் புரிந்து கொள்ள வேண்டும். அந்தப் பக்குவம் வராதவரை இலங்கைத் தீவில் அமைதி என்பது வெறும் கனவாகவே முடியும்.
சிங்கள தேசத்தில் ஆயுதக் கிளர்ச்சியை அறிமுகப்படுத்திய ஜே.வி.பி.யினர் சிங்களவர்கள் என்பதால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டு விடுவிக்கப்பட்டு, இன்று அரசியல் தலைவர்களாக வலம் வருகின்றார்கள். இந்த ஜே.வி.பி. கிளர்ச்சிக்கு ஆதரவானவர்கள் சிங்களவர்கள் என்பதால் மன்னிக்கப்பட்டு சமூக வாழ்வில் இணைக்கப்பட்டார்கள். காரணமற்ற ஆயுதக் கிளர்ச்சியை நடாத்தியவர்கள் சிங்களவர்கள் என்பதால் அவர்கள் என்றுமே வதை முகாமில் சிறை வைக்கப்படவில்லை. ஆனால்,
நியாயமான அத்தனை காரணங்களையும் கொண்டுள்ள தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்டம் சிங்கள தேசத்திற்கு பயங்கரவாதமாகவும்,
தமிழர்கள் பயங்கரவாதிகளாகவும் தெரிகின்றார்கள். தமிழர்களின் அழிவும், இழப்பும் அவர்களுக்கு மகிழ்ச்சியையும் பெருமிதத்தையும் அள்ளி வழங்குகின்றது.
சிங்கள தேசத்தின் வெற்றிக் கொண்டாட்டமும், தமிழர் மீதான வதை முகாம் கொடுமைகளும், அச்சுறுத்தல்களும், கடத்தல்களும், படு கொலைகளும், காணாமல் ஆக்குதல்களும் முன்னரை விடவும் பலமான எதிர்வினைகளை உருவாக்கியே தீரும்.
அந்த எதிர்வினை, ஈழத் தமிழர்களை மட்டுமல்ல, உலகில் வாழும் எல்லாத் தமிழர்களையும் ஒன்றிணைக்கும். அந்த மாபெரும் தமிழர் எழுச்சி ஈழத் தமிழர்களை வெகு விரைவில் விடுவிக்கும். அதுவே விடுதலைப் புலிகளின் தியாகத்திற்கு உலகத் தமிழினம் வழங்கும் கவுரவமாக அமையும்.
ஈழநாடு ஆசிரியர் தலையங்கம்











