அவதூறு பரப்பியதற்காக த ஏசியன் ரைபூன் ஆசிரியருக்கு 125,000 குரோணர்கள் அபராதம்
Posted by எல்லாளன் ஈழம் 8:39 AM
நோர்வேயை தளமாக கொண்ட ஊடகவியலாளர் நடராஜா சேதுரூபன் மீது அவதூறுகளை பரப்பியதற்காக த ஏசியன் ரைபூன் ஊடகத்தின் ஆசிரியர் கே ரி ராஜசிங்கம் 125,000 குரேணர்களை அபராதமாக செலுத்தவேண்டும் என சுவிஸ் மாவட்ட நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
த ஏசியன் ரைபூன் ஊடகத்தின் ஆசிரியர் கே ரி ராஜசிங்கம் இந்த அபராதத்தை சேதுவுக்கு செலுத்த வேண்டும் எனவும், அவதூறு பரப்பும் கட்டுரைகளை இணையத்தளத்தில் இருந்து நீக்கவேண்டும் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்த வழக்கு விசாரணைகள் மீதான தீர்ப்பு கடந்த புதன்கிழமை (19) வெளியிடப்பட்டது. சேது விடுதலைப்புலிகளின் புலனாய்வுப்பிரிவு உறுப்பினர் என த ஏசியன் ரைபூன் செய்தி வெளியிட்டிருந்தது. இந்த தகவலால் சேதுவின் குடும்ப உறுப்பினர்கள் உயிர் அச்சுறுத்தல்களை எதிநோக்கியதாக சேதுவின் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் தெரிவித்திருந்தார்.

சிறீலங்காபடையினரால் வெட்டிக் கொலையான போராளி அடையாளம் காணப்பட்டார்
Posted by எல்லாளன் அரசபயங்கரவாதம், ஈழம், விடுதலைப் புலிகள் 8:37 AM
இணையத்தளங்களினூடாகவும், தொலைக்காட்சி வாயிலாகவும் வெளிவந்த மற்றுமோர் போர்க்குற்ற ஆதாரமான போராளி ஒருவரை சிங்கள இராணுவத்தினர் வெட்டிக்கொலை செய்யும் காட்சியில் வெட்டப்பட்டு கொல்லப்பட்ட போராளி அடையாளம் காணப்பட்டுள்ளார்.மல்லாவியை பிறப்பிடமாக கொண்ட விருந்தன் என்பவரே இவ்வாறு கொடூரமாக இனவெறி இராணுவத்தினரால் கதறக் கதற வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளமை அவரின் குடும்பத்தினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
கடந்த ஆண்டு முள்ளிவாய்க்காலில் முடிவுற்ற கொடியபோரின் பின் காயமுற்ற நிலையில் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அணியின் போராளி விருந்தன் என்பவரே இவ்வாறு இராணுவத்தால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இறுதிக்கட்ட போரின் பின் விருந்தன் என்னானார் என்ற தகவல் தெரியாது தேடிக்கொண்டிருந்த வேளையில் ஓராண்டு கழித்து இத்தகவல் கிடைத்திருப்பதும், கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளமையை இணையத்தளங்களினூடும், தொலைக்காட்சிவளியாகவும் பார்த்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்துள்ளதாக விருந்தனின் மாமியார் கூறியுள்ளார்.
இவரின் தந்தை கூட விருந்தனை காணாத நாள் முதல் யோசித்து யோசித்துக்கொண்டிருந்ததாகவும், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அவரும் இறந்துவிட்டதாகவும் கூறினார்.
சுவிஸில் வசிக்கும் விருந்தனின் தந்தையின் இளைய சகோதரி இந்தக் கோரக்காட்சியை பார்க்கவா உயிரோடு இருந்தேன் என்று வேதனையோடு இத்தகவலை தெரிவித்தார்
ஆர்ப்பாட்டத்தை கண்டு மிரண்ட கமலஹாசனின் உளறல் அறிக்கை
Posted by எல்லாளன் அம்பலம், ஈழம், தமிழகம் 7:55 AM
சென்னையில் நடிகர் கமலஹாசன் வீட்டிற்க்கு முன்னால் ஆர்ப்பாட்டம்

சென்னையில் இன்று எப்.ஐ.சி.சி.ஐ.யின் ஊடகப் பிரிவின் தலைவர் பதவியில் இருந்து கமலஹாசனை விலகக்கோரி ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அவர் அலுவலகம் முன்னால் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் காரணமாக கமல் ஆடிப்போயுள்ளதாக அறியப்படுகிறது.

கமலஹாசனின் அலுவலகம் முன்னால் இன்று நடந்த அமைதியான ஆர்ப்பாட்டத்தை கண்டு மிரண்ட கமல், உளறல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நாங்கள் கொழும்பு விழாவிற்கு செல்லப்போவதில்லை என எல்லோருக்கும் தெரிந்த பழைய கதையை எழுதியுள்ளார். இப்போது கேட்பது எப்.ஐ.சி.சி.ஐ.யின் ஊடக பிரிவின் தலைவர் பதவில்யில் இருந்து விலகச்சொன்னது மட்டும்தான். தமிழில் கேட்டிருக்கும் இந்த வேண்டுகோளுக்கு கமல் பதில் சொல்லவேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதில் எப்.ஐ.சி.சி.ஐ யில் மீடியா தலைவர் பதவியில் இருந்து விலக கோரியதை புரிந்துகொள்ளாமல், பத்மஸ்ரீ பதவியில் இருந்து விலக முடியாது என பதில் எழுதி உள்ளார்.