தமிழர் போராட்டத்திற்கு எதிராக கொழும்பில் கைகோர்க்கும் துரோகிகள்
Posted by எல்லாளன் 12:19 PM
கிழக்கு மாகாணத்தில் விடுதலை புலிகள் அரசியல், நிர்வாக, இராணுவ நடவடிக்கைகள் ஆம்பிக்கப்பட்டிருக்கும் வேளையில் இராணுவத்திற்கு எதிரான பாரிய நடவடிககையில் ஈடுபடுவதற்கு முன்னர் இராணுவத்தினருக்கு துணையாகயுள்ளவர்களை அகற்றுவதில் புலிகள் தமது இராணுவ நடவடிக்கைகளை பல்வேறு கோணங்களில் முடிக்கிவிட்டுள்ளனர்.
கொழும்பில் தமிழர் போராட்டத்திற்கு எதிரான இரு துரோகிககள் கைகோர்க்கின்றனர். இந்த இரு குழுக்களின் கைகுலாவல் கொழும்பில் உள்ள தமிழர்களை ஒடுக்குவதற்காகவா? அல்லது விடுதலை புலிகளினால் கொழும்பில் மேற்கொள்ளப்படும் தாக்குதல் திட்டங்களை தடுத்து நிறுத்துவதற்காகவா? அல்லது மஹிந்த அரசாங்கத்திற்கு முட்டுக் கொடுக்கும் பிள்ளையாளை ஒரம் கட்டுவதற்காகவா? இதில் விடுதலை புலிகளின் செயற்பாட்டை கட்டுப்படுத்துவது என்பது எளிதான விடயம் அல்ல ஆனால் தற்போது கருணா, பிள்ளையான் என இரு குழுக்களாக பிரிந்தள்ள நிலையில் பிள்ளையானை ஒரம் கட்டுவதற்காகவே தமிழர்களின் ஏககால துரோகியான டக்ளஸ்யுடனான கூட்டாகும்.
அம்பாறை, திருகோணமலை, இரு மாவட்டங்களிலும் துணைக்குழுக்கள் செயற்பட்டுவந்தாலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஆயுதக்குழுக்களின் உறுப்பினர்கள், மற்றும் அவர்களின் அலுவலகங்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்படுகின்றது. இந்த இரு மாவட்டங்களையும் விட மட்டக்களப்பு மாவட்டம் புலிகளின் செயற்பாட்டிற்கு மிகவும் பொருத்தமானது.
இதனால் மட்டக்களப்பை முதல் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதனுடாக ஏனைய இரண்டையும் விரைவாக கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர முடியும் என்பது விடுதலை புலிகளின் கனிப்பாக இருக்கலாம். எழுவான்கரையில் புலிகளின் பிஸ்டல் குழுவினர் தாக்குதல் மேற்கொண்டுவர படுவான்கரை பக்கம் கனரக ஆயுதங்களுடன் அதிக எண்ணிக்கையிலானவர்கள் தாக்கியழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர்.
கடந்த ஞாயிறு அதிகாலை படுவான்கரை திகிலிவெட்;டை பகுதியில் அமைந்துள்ள பிள்ளையான் குழு அலுவலகம் தாக்குதலுக்குள்ளாகியது. மாவட்டங்களில் அமைந்துள்ள ஆயுதக்குழுக்களின் அனைத்து அலுவலகத்திற்கு இராணுவத்தினர் பாதுகாப்பு வழங்கிவருகின்ற நிலையில் புலிகள் பாரியளவிலான தாக்குதலை மேற்கொண்டுவருகின்றனர்.
தாக்குதலின் போது காவல் பணியில் ஈடுபட்ட இராணுவம் உட்பட ஆறு பேர் கொல்லப்பட்டதுடன் மேலும் எட்டு பேர் படுகாயமடைந்துள்ளனர். கொல்லப்பட்டவர்களினதும், அலுவலத்திலுள்ள ரி-56 ரக துப்பாக்கிகள் -05, பி.கே எல்.எம்.ஜி -1, பி.கே ரவைக்கூடு-01, பிகே எல்.எம்.ஜி ரவைகள்-100, ஏகே ரவைக்கூடு-09 ஏகே ரவைகள்-200, கோல்சர்-01 போன்ற ஆயுதங்களையும் புலிகள் எடுத்துச் சென்றுள்ளனர்.
தாக்கியழிக்கும் நடவடிக்கை இடம்பெற்றுவரும் அதேவேளை நகர் பகுதிகளில் புலிகளின் பிஸ்டல் குழுவினர்கள் தமது நடவடிக்கைகளையும் அதிகரித்துள்ளனர். கடந்த வியாழக்கிழமை தன்னாமுனை, மற்றும் மட்டு நகர்ப் பகுதிகளில் இரு உறுப்பினர் சுட்டுக்கொல்லப்பட மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
புல்லூருவிகளை கட்டுப்படுத்துவதன் மூலமே தமது இலக்குகளை இலகுவாக அடைய முடியும் என்பது புலிகளின் தாரகமந்திரம். எதிரியை விரைவில் தோற்கடிப்பதற்கு முதலில் துரோகியை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்பது கணிப்பு. இதேவேளை ஒட்டுக்குழுவினரிடையே ஏற்பட்டுள்ள பிளவு விடுதலை புலிகளின் தாக்குதல் நடவடிக்கைக்கு சாதகமாக அமைந்துள்ளது.
விடுதலை புலிகளின் அமைப்பிலிருந்து கருணா விலகிய போது புலிகளின் புலனாய்வுப் பிரிவினர் அக்குழுவினருள் ஊடுருவினர். இதனால் அப்போது கொழும்பு கொட்டாவ, தீவுச்சேனை, போன்ற இடங்களில் பல தாக்குதல் சம்வங்கள் இடம்பெற்றும் பல உறுப்பினர்கள் கொல்லப்பட்டார்கள். அவ்வாறே தற்போதும் கருணா குழு, பிள்ளையான் குழு என இரு பிரிவு ஏற்பட்டுள்ளமை விடுதலை புலிகளின் தாக்குதலைகள் அதிகரிப்பதற்கு ஏற்ற தகவல்களை பெற்றுக் கொள்ள வாய்ப்பாக அமைந்துள்ளது.
பிள்ளையான் குழுவின் சில உறுப்பினர்கள் விடுதலை புலிகளுக்கு தகவல்களை வழங்குவதாக கருணா நேரடியாக குற்றம் சாட்டிருந்தார். இந்த தகவலில் எவ்விதம் உண்மை உள்ளது என்பது மயக்கமாக இருக்கலாம். தற்போது கருணாவுக்கு கௌரவ பிரச்சினை ஏற்பட்டுள்ளது. விடுதலை புலிகளின் அமைப்பில் இருந்த காலகட்டத்தில் தனக்கு கீழ் பணிபுரிந்த பிள்ளையான் தற்போது முதல் அமைச்சர் பட்டத்துடன் செயல்பட தான் வெறும் விநாயமூர்த்தி முரளிதரனாக இருப்பது சகிக்க முடியவில்லை.
மக்கள் மத்தியிலும் வரமுடியாது, இராணுவத்தின் உயர் நிலைக்கும் செல்ல முடியாத நிலையில் மிகவும் விரக்கியடைந்த நிலையில் ஏற்படுத்தப்பட்ட கூட்டுத்தான் கருணா-டக்ளஸ் உறவு. கிழக்கில் பிள்ளையான் குழுவினர் கருணாகுழுவினரையும், டக்ளஸ் அணியினரையும் போட்டுதள்ளும் நிலையில் இவர்களின் கூட்டு எதிர்காலத்தில் பிள்ளையான் குழுவினருக்கு பெரும் சவாலாகவே அமையக் கூடும்.
இன்னொருவிடயத்தையும் நாங்கள் கவனிக்க வேண்டும் யாழ்ப்பாணி மட்டக்களப்பானை புறக்கணிப்பதாக தெரிவித்தே விடுதலை புலிகளுக்கு எதிராக செயற்படத் தொடங்கிய கருணா தற்போது கூட்டுச் சேர்ந்துள்ளவர் எந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர் என கேட்க விரும்புகின்றேன். இவர்கள் அனைவரும் தங்களின் சொந்த நலனுக்காக பாடுபடுகின்றாhகள் தவிர தமிழ் மக்களின் நலனுக்காக இல்லை.
இரு பிரிவுகளாக உள்ள தரப்பினர் மக்களை அச்சுறுத்தி என்பக்கம் உன்பக்கம் என இழுக்கின்றனர். கடந்த நான்கு தினங்களுக்கு முன்னர் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள உயர் பதவி உத்தியோகஸ்த்தர்கள், கல்வி மான்கள், வைத்தியசார்கள், புத்திஜீவிகள,; ஊர் பிரமுவகர்கள், ஆகியோரை வலுக்கட்டாயத்தின் பெயரில் கருணா தரப்பிலான பொறுப்பாளர்கள் கொழும்புக்கு அழைத்துவந்தள்ளனர்.
இவர்கள் அனைவரும் கருணா தலைமையில் ஜனாதிபதி, பாதுகாப்பு செயலாளர், ஜனாதிபதி ஆலோசகர் மற்றும் உயர் அதிகாரிகளை சந்தித்து கருணா அணியிலான கட்சியை மேம்படுத்துவது, மட்டக்கப்பு மாவட்டத்தின் அபிவிருத்தி தொடர்பான விடயங்கள் ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இச்செயலானது அப்பாவி பொதுமக்களை கொல்ல கொடுக்கும் நடவடிக்கையாகும். கருணா தரப்பில் வருகை தருபவர்கள் பிள்ளையான் தரப்பிலும் வருகை தரவேண்டும் என கோரிக்கை விடுத்தால் இவர்கள் மறுப்பு தெரிவித்தால் மறுநாள் சுட்டுக் கொல்லப்படுவார்கள் என்பதுதான் உண்மை.
இவ்வாறான நடவடிக்கை அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் பல்சுவை கதம்பமாக இருக்கலாம் ஆனால் மக்களைப் பொறுத்தவரையில் அது மரணம். இதுதான் கிழக்கில் இன்று ஏற்பட்டுள்ள நிலமை. கிழக்கில் அரசாங்கம் தமிழ் ஆயுதக்குழுக்களை வைத்துக் கொண்டு விடுதலை புலிகளை அழிப்பதற்கான இராணுவ நடவடிக்கை என்ற போர்வையில் தமிழர்களின் நிலங்களை அபகரிப்பு செய்துவருன்றது.
அவர்களின் சொந்த இடங்களில் நிம்மதியாக வாழவிடாது நாளாந்தம் இராணுவம் கெடுபிடிகளை மக்கள் மீது திணிக்கின்றனர். கிழக்கு மக்கள் ஜனநாயகமாக வாழ்கின்றார்கள், அவர்களின் பொருளாதாரம் மேம்பட்டுவருவதாக அரச ஊடகங்களில் ஆளும் தரப்பினர்களினால் கொக்கரிப்பதற்கு எதிரான நடவடிக்கையே கிழக்கில் இடம்பெற்றுவருகின்றது.
விடுதலை புலிகளை அழிப்பதற்கு இலங்கை இந்திய ஒப்பந்தம், ஒட்டுக்குழுக்கள் - சிறிலங்கா ஒப்பந்தம், தற்போது ஒட்டுக்குழுக்களிடையே ஒப்பந்தம் தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடும் அமைப்பு ஒன்றுக்கான இத்தனை கூட்டு ஒப்பந்தங்களிhல் கடந்த காலங்களிலும் சரி எதிர் காலங்களிலும் சரி என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஒரு விடயம் நடைபெற்றுவருகின்றது. அதாவது புலிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துக் கொண்டு தமிழ் இளைஞர்களை கொல்ல கொடுக்கின்றனர். இவ்வாறான நடவடிக்கை தமிழ் மக்களின் எண்ணிக்கையை குறைத்து தமிழர்க்கு அடுத்தபடியாக இருக்கம் முஸ்ஸிம் இனத்தின் விகிதசாரத்தினை அதிகரிப்பதற்கு வழிவகுக்கின்றனர்.
-மகான்-

காலம் அரித்திடாது எம் இணைப்பை...
Posted by எல்லாளன் 9:16 AM
01.
1987 ஆம் ஆண்டு சிறிலங்கா - இந்திய ஒப்பந்தம் ஏற்பட்ட வேளையில் சில ஈழப்போராளிகள் உட்பட பலரிடமும் அரசியல் தீர்வு பற்றிய ஒரு மயக்கநிலை தோற்றம் பெற்றிருந்தது.
ஈழப்போராட்டத்தின் பின்தளமாக இருந்த தமிழ்நாட்டை விட்டு பணியகங்களையும் மூடிவிட்டு ஈழப்போராளிகள் தாயகத்திற்கு திரும்ப நிர்ப்பந்திக்கப்பட்டனர்.
அப்போது நான் ஈழ நண்பர் கழகத்தின் வெளியீடாக வந்துகொண்டிருந்த 'நட்புறவுப்பாலம்" இதழில் 'விடைபெறும் நேரம்.." என ஒரு கடிதம் எழுதினேன்.
அக்கடிதத்தின் இறுதி வரிகளாக 'நண்பர்களே இது விடைபெறும் நேரம்தானா என்பது தீhமானமாகவில்லை. ஆனாலும் எங்கள் நினைவுகள் உங்களின் அன்பு நட்பு தோழமை இவற்றையே தாங்கியுள்ளன. உங்களிடமும் இவற்றையே கையளித்துள்ளோம்." என எழுதி ஓக். 87 என கையெழுத்திட்டிருந்தேன்.
காலம் இருபது ஆண்டுகளைத் தின்று முடித்துவிட்டது. துன்பியல் நிகழ்வுகள் பலவற்றுக்கு நாம் சாட்சியமாகியும் விட்டோம்.
இப்போதெல்லாம் அன்றைய நாட்களைப்போல் ஊடும்பாவுமாக நாம் வாழ்வதற்கு இந்திய நாட்டின் சட்டங்கள் இடம்கொடுக்குமா தெரியவில்லை. தற்போது உங்களிடம் இருந்து பல்லாயிரம் மைல் தொலைவில் அலைந்து உழன்று கொண்டிருக்கிறேன்.
புலம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கையில் நானும் ஒரு தலையாக இணைந்துவிட்டேன். ஆனால் என்னுள்ளான நெருப்பை என்றும் நான் அணைய விட்டதுமில்லை, எனக்கான தேசியப் பணிகளைக் கைவிட்டதுமில்லை.
அப்பணியாக இக்கட்டுரையையும் எழுதுகின்றேன்.
நண்பர்களே,
எத்தனையோ துயர துன்பியல் நிகழ்வுகளையும் தாண்டி ஈழப்போராட்டம் விரிவுபெற்று சில எல்லைகளைத் தொட்டு நிற்கின்றது. அதேபோல் மரணத்துள்ளான வாழ்வும் மாற்றமின்றித் தொடர்கின்றது.
இனப்படுகொலை முன்னெப்போதையும் விட சிறிலங்கா அரசால் சர்வதேச அங்கீகாரத்துடன் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றது.
இதற்கு காந்தியை மகாத்மாவாகக்; கொண்டாடும் உங்கள் தேசமும் உடந்தையாக இருக்கின்றது என்பதற்கு வவுனியா படைத்தளம் சாட்சியமாகி உள்ளது.
பல்லுக்குப் பல், கண்ணுக்குக் கண் என்ற முடிவிலேயே இந்திய தேசம் ஈழத்தமிழர்கள் மீதான தனது நகர்வுகளை மேற்கொள்கின்றது.
இந்திய தேசம் அரசியல் இராஐதந்திரத்துடன் நடக்கின்றதா அல்லது வர்ணாச்சிரம தர்மத்தை முன்னிறுத்துகின்றதா என்பதே இன்றைய கேள்வி.
இந்தச் சூழலே நாம் விடைபெற முடியாதவர்கள், இன்னும் நெருக்கமாக இணைந்திருந்து பணியாற்ற வேண்டியவர்கள் என்பதை உணர்த்தி நிற்கின்றது.
முன்னெப்போதையும் விட அயல் தேசமான இந்தியா உள்ளிட்ட சர்வதேசத்தார் தமது கண் காதுகளைச் சின்னஞ்சிறிய இலங்கைத்தீவின் சந்து பொந்துகளில் எல்லாம் விதைத்து வைத்திருக்கின்றனர்.
சர்வதேசம் துயருறும் மக்களுக்காகப் போராடும், சமூத்திற்கு நியாயம் வழங்கும் என்றுதானே நீங்கள் எண்ணுவீhகள். ஆனால் நான் உங்களுடன் தமிழ்நாட்டில் 1978 முதல் 1988 வரை இருந்த காலத்தில் சர்வதேசத்தைப் புரிந்துகொண்டதைவிடவும் புலம்பெயாந்த வாழ்வியலின் பின்னணியில் மிகத் துல்லியமாக அதனைப் புரிந்துகொள்ள முடிந்துள்ளது.
'எல்லாமும் திருப்பபட்டாயிற்று
வட அத்திலாந்திக் கரைகளுக்கு
கரை தொட்ட தேசங்களுக்கு.
வந்து வந்து சேர்கின்றன பார்
அறுத்தெடுத்த ஈரல் குலைகள்
துடிதுடிக்கும் இதயங்கள்
உருவி எடுக்கப்பட்ட நாடி நரம்புகள்
பதனமான முகங்கள்
கனிமச் சத்தும்
எண்ணெய்க் கொழுப்பும்
ஊறின தேறல்
ருசி என்ற ருசி.."
இதுதான் சர்வதேசம். புலம்பெயர்ந்ததனால்தான் இப்படிப் புரிந்து என்னால் கவிதை எழுத முடிந்தது.
சர்வதேசம் விடுதலை அவாவும் சமூகங்களுக்கு தன் நலன்களுக்கு அப்பால் எங்கும் ஒத்தாசை புரிந்ததோ அமைதியை ஏற்படுத்தியதோ தீர்வை வழங்கியதோ கிடையாது. அது கிழக்குத் தீமோராக இருக்கலாம் கொசொவோவாக இருக்கலாம் எல்லா இடத்திலும் தன் நலன்களையே இந்தச் சர்வதேசத்தார் முன்னிறுத்தி உள்ளனர் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். கனிமச் சத்தும் எண்ணெய்க கொழுப்பும் ஊறின தேறலுக்காகவே அவர்கள் அலைந்து கொண்டிருக்கிறார்கள்.
இந்தச் சின்னஞ்சிறு தீவில் சர்வதேசத்திற்கு என்ன நலன்கள் இருக்க முடியுமென நீங்கள் சிந்திப்பது நியாயமானதொன்றே. அதுவும் துணைக்கண்டமான இந்தியா போன்ற பெரிய சந்தை வாய்ப்பும், பெருமளவான மூலவளமும் இல்லாத இலங்கைத் தீவிற்கு சர்வதேசம் ஏன் இத்தனை முக்கியத்துவம் கொடுக்கின்றது என்பது பலருக்கும் புரியக்கூடியதொன்றல்ல.
இந்தியாவின் எல்லைகளைத் தொட்டு நிற்கும் இந்துமாக் கடலிடையேயான இலங்கைத்தீவின் அமைவிடமே அதன் பலமும் பலவீனமுமாகும்.
அவ்வமைவிடம் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்ததாக புவிசார் அரசியலில் சர்வதேச நலன்களுடன் பின்னிப் பிணைந்துள்ளதே அதன் பலவீனம்.
அதனாலேயே ஈழப் போராட்டம் நீண்டு செல்ல வேண்டியதாக உள்ளது.
'இந்து சமுத்திர நாடுகளின் நிலை, இவ்வல்லரசுகளின் போட்டிக்குள் ஏதோ ஒரு வகையில் சிக்குண்டு, தமது சுயாதிபத்தியத்தை இழந்து, அமைதியை இழந்து வாழவேண்டிய துர்ப்பாக்கியம் உள்ளதாய் இருக்கின்றது." என 70 ஆம் ஆண்டில் முகிழ்ந்த இளந்தலைமுறையைச் சேர்ந்த இரு அரசியல் அறிஞர்கள் 1987 ஆம் ஆண்டில் எழுதி வெளியிட்ட ஆய்வு நூலான 'இந்து சமூத்திரமும் இலங்கை இனப்பிரச்சனையும்" எனும் நூலில் தெரிவித்திருக்கின்றனர்.
அதாவது, ஈழத்தமிழரை அழிக்கும் சிறிலங்கா அரசிற்கு அமெரிக்காவும் ஆதரவு அதேவேளையில் அமெரிக்காவை கிலிகொள்ள வைத்திருக்கும் எதிரியான சீனாவும் ஆதரவு. தமிழ்மொழி பேசும் மக்களை ஒரு மாநிலமாக கொண்டிருக்கும் இந்தியாவும் ஆதரவு. நாள்தோறும் இந்தியா மீது யுத்தப்பிரகடனம் செய்து கொண்டிருக்கும் பாகிஸ்தானும் ஆதரவு. என்ன வேடிக்கை பாருங்கள்.
இதில் ஈழப்போராட்டம் எவர் நலனையும் சாந்திருக்காததே சட்டாம்பிள்ளையான சர்வதேசத்திற்கான சிக்கலாகும்.
உலகின் பல்வேறு தேசிய இனச் சிக்கல்களில் சர்வதேசம் புகுந்து விளையாடி அவ்வினங்களின் விடுதலை அவாவை கருவறுத்ததை வெற்றியாகக் கொண்டாடி வருகின்றது. அவர்கள் கருவறுத்ததின் சாட்சியமாக நாம் பாலஸ்தீனத்தைக் கொள்ளலாம். அதன் சோகக்கதையை நான் விரிவாகக் கூறவேண்டியதில்லை.
ஈழப்போராட்டத்தின் தொடக்க காலத்தில் பாலஸ்தீன விடுதலைப் போராட்டம் முன்னுதாரணமாகக் கொள்ளப்பட்டதை நீங்கள் அறிவீர்கள். ஆனால் இன்று என்ன நிலையில் உள்ளது பாலஸ்தீனம்?
அதேபோல் ஈழப்போராட்டத்தை நீர்த்துப்போகச் செய்வதும் அதன் வீரியத்தை மங்கச் செய்து முழங்காலில் இருக்க வைப்பதுமே இந்தியா உள்ளிட்ட சர்வதேசத்தின் முயற்சியாகும்.
சர்வதேசம் வழங்கும் ஆதரவும் துணிச்சலும்தான் சிறிலங்கா அரசு ஈழத்தமிழர்களை அழிக்கும் இனச்சுத்திகரிப்பிற்கு தூண்டுகோலாக அமைந்துள்ளது.
இன்றைய ஈழப்போராட்டமானது சிறிலங்காவிற்கு எதிராக மட்டுமல்ல சர்வதேசத்திற்கும் எதிர்முகம் கொடுக்க வேண்டி உள்ளது என்பதை மறந்துவிடாதீர்கள்.
இந்நிலையில்தான் உங்கள் அன்பும் நட்பும் தோளணைவும் எமக்குத் தேவையாக இருக்கின்றது.
1983 ஆம் ஆண்டு யூலைப் படுகொலை நிகழ்வுகள் யாராலும் மறக்கக் கூடியதொன்றல்ல. நீங்களும் மறந்திருக்க மாட்டீர்கள். இந்த ஆண்டு அதன் 25 ஆம் நினைவாண்டு.
1983 ஆம் ஆண்டு இந்நிகழ்வின் போது நான் உங்களுடன் இருந்தேன். அந்த நிகழ்வு தமிழ்நாட்டில் ஏற்படுத்திய எதிர்வினைகள் இன்றும் பசுமையாக நினைவில் உள்ளன. கம்யூனிஸ்ட் கட்சியின் பணியகமான பாலன் இல்லம் வந்ததும் அங்கு கட்சியின் பொறுப்பாளர்களான தோழர்கள் பலரைச் சந்தித்து நிலமையை விளக்கியதும் நன்கு நினைவில் இருக்கின்றது.
இடதுசாரிக் கட்சிகளின் மாணவர் அமைப்பினர் (யுளுகுஐ - ளுகுஐ) அன்று பலம் பொருந்தியவர்களாக செயல் வேகம் கொண்டவர்களாக இருந்தனர். அவ்வேளையில் சென்னை சட்டக்கல்லூரி, மாநிலக் கல்லூரி, பச்சையப்பாக் கல்லூரி, அரசினர் கலைக் கல்லூரி, தாம்பரம் கிறிஸ்தவக் கல்லுரி ஆகியவற்றின் விடுதிகளில் கூட்டங்கள் நடாத்தியதும், அக்கல்லூகளின் மாணவப் பிரதிநிதிகளைச் சந்தித்ததும் பின்னர் அவர்கள் எல்லோரும் தெருக்களில் இறங்கி ஊர்வலம் போனதும் ஒரு மக்கள் எழுச்சியாக மாறியதும் அரிய தருணங்கள் அவை.
அக்காலகட்டம் மீள உருவாகின்றதோ என்பதைத்தான் உங்கள் நடவடிக்கைகள் எமக்கு உணர்த்துகின்றன. கட்சிகளுக்கு வெளியேயான தமிழ்ப் படைப்பாளிகள் முன்னணியும், திருச்சி சட்டக்கல்லூரி மாணவர்களும் எமக்காகக் களமிறங்கி குரல் கொடுத்ததைப் பார்த்தபோது 1983 அரிய தருணங்கள்தான் நினைவில் எழுந்தன.
இன்று கம்யூனிஸ்ட் கட்சியினராகிய நீங்களும் ஏறத்தாழ அனைத்துக் கட்சியினரையும் இணைத்து நடத்தும் இந்த உண்ணாவிரதமும் அதற்குச் சான்றாக அமைகின்றது. அதுவும் காந்தியைக் குறியீடாக்கி அவரது பிறந்த நாளில் போராட்டத்தை நடாத்துகிறீர்கள். ஈழப்போராட்டமும் காந்திய சிந்தனையிலேயே வளர்ந்தது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
02.
இலங்கைத்தீவின் அரசியல் வரலாற்றில் 1930 ஆம் ஆண்டினை மையமிட்ட காலகட்டம் கவனத்தில் கொள்ளவேண்டியது ஒன்றாகும்.
1948 ஆம் ஆண்டில் இலங்கைத் தீவுக்குச் சுதந்திரம் வழங்கிய சோல்பரி அரசியல் யாப்புக்கு முன்னரான டொனமூர் சீர்திருத்தம் அக்காலகட்டத்தில்தான் நடைமுறைக்கு வந்திருந்தது.
டொனமூர் சீர்திருத்தத்தின்படி இனவாரி பிரதிநித்துவம் கைவிடப்பட்டு பிரதேசவாரி பிரதிநித்துவம் அறிமுகப்படுத்தப்பட்டது. அத்துடன் கல்வி கற்ற உயர்மட்ட மக்களுக்கு மட்டும் வழங்கப்பட்டிருந்த வாக்குரிமையை மாற்றி 21 வயதிற்கு மேற்றபட்ட ஆண் - பெண் இருபாலாருக்குமான சர்வசன வாக்குரிமை அறிமுகமானது.
டொனமூரின் இந்தச் சீர்திருத்தம் தமிழர்களால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. குறிப்பாக பிரதேசவாரி பிரதிநித்துவம். இதனை எதிர்ப்பதில் யாழ்ப்பாண இளைஞர் பேரவை (துயககயெ லுழரவா ஊழபெசநளள) முக்கிய பங்காற்றியது.
இந்த யாழ்ப்பாண இளைஞர் பேரவைத் (துயககயெ லுழரவா ஊழபெசநளள) தலைவர்களாக அறியப்பட்ட ஒறேற்றர் சுப்பிரமணியம், ஹண்டி பேரின்பநாயகம், கு.நேசையா போன்றவர்கள் காந்திய சிந்தனையின் செல்வாக்குக்கு உட்பட்டிருந்தனர். தங்கள் வாழ்வியலில், செயல்பாடுகளில் காந்திய வழிமுறையையே கடைப்பிடித்தனர்.
அத்தலைவர்கள் தங்கள் காந்தியப் பற்றை வெளிப்படுத்தும் வகையில் மகாத்மா காந்தியை இலங்கைக்கு - குறிப்பாக யாழ்ப்பாணத்திற்கு அழைத்துச் சிறப்பித்தனர்.
1970களில் நான் இளைஞனாக அரசியலில் ஈடுபடத் தொடங்கிய காலத்தில் திரு.கு.நேசையா அவர்களை பொது நிகழ்வுகளில் பல தடவைகளில் பார்க்கும் சந்தர்ப்பங்கள் ஏற்பட்டது.
அவ்வேளைகளில் எல்லாம் அவரை நான் வெள்ளைக் கதராடையுடனேயே பார்த்திருக்கிறேன். அவரது ஆடை அவரை ஒரு காந்தியவாதியாகவே எங்களுக்கு அறிமுகப்படுத்தியிருந்தது. அவரது பேச்சுகளிலும் காந்தியமே மிகுந்திருந்தது.
1949 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரான சா.ஜே.வே.செல்வநாயகம் ஈழத்துக் காந்தியென்ற அடைமொழியுடன் ஊடகங்களாலும் மக்களாலும் புகழப்பட்டார்.
சாத்வீக வழியிலான போராட்டத்தையே அவர் அரசியல் வாழ்வில் முன்மொழிந்தார். அதன் வழியையே கடைப்பிடித்தார். தனது தலைமையில் தனிச்சிங்களச் சட்டத்திற்கு எதிராக 1956 ஆம் ஆண்டில் நடாத்திய போராட்டத்தையும், 1961 ஆம் ஆண்டில் நடாத்திய சத்தியாகிரகப் போராட்டத்தையும், சாத்வீகப் போராட்டம் என்ற காந்திய வழிப்போராட்டம் என்றே அறிவித்தார்.
அதில் அவரும் அவரது சகாக்களும் வன்முறையாளர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டனர். அவர் இறக்கும் வரையில் தனது கொள்கை வழிப்போராட்டத்தை அவர் கைவிடவே இல்லை. ஆனால் அவர் இறப்பதற்கு முன்னால் தனது சாத்வீக நடவடிக்கைகள் எதும் வெற்றியளிக்காத நிலையில் 'கடவுள்தான் தமிழர்களைக் காப்பாற்ற வேண்டும்" எனக் கூறிச்சென்றார்.
1972ல் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய அரசியல் அமைப்புக்கு எதிராக தமிழர்களின் கட்சிகளை ஒருங்கிணைத்து தமிழர் ஐக்கிய முன்னணியை உருவாக்கிய திரு.ச.ஞானமூர்த்தி அவர்கள் காந்திய நெறிமுறையிலேயே வாழ்ந்து பணியாற்றினார்.
ஏறத்தாழ 1930களில் செயல்பட்ட தலைவர்களில் இருந்து ஈழத்துக் காந்தியெனப் புகழப்பட்ட சா.Nஐ.வே. செல்வநாயகம் அவர்கள் காலமான 1977 வரையில் இலங்கைத்தீவின் அரசியலரங்கில் செயற்பட்ட தமிழர் தலைவர்கள் அனைவரும் காந்திய நடைமுறைகளையே கடைப்பிடித்தனர்.
இன்னும் சிறப்பாக கூறுவதானால் 1987 ஆம் ஆண்டில் சிறிலங்கா - இந்திய உடன்படிக்கையின் அடிப்படையில் அமைதிப்படை என்ற பெயரில் இந்திய இராணுவம் நுழையும் வரையில் காந்தியும் காந்திய சிந்தனையும் செல்வாக்கும் நம்பிக்கையும் மிக்கதாகவே இலங்கைத் தமிழர்களிடம் காணப்பட்டது.
ஈகைச்சுடர் திலீபன் அந்த நம்பிக்கையிலேயே உண்ணா நோன்பை முன்னெடுத்தான்.
ஆனால் அவன் இறக்க நேரிட்டது காந்தியின் பிம்பத்தை காந்திய நம்பிக்கையை இலங்கைத் தமிழ் மக்களின் நினைவுகளில் இருந்து உடைத்தெறிய வழிவகுத்து விட்டது என்பதே உண்மையாகும்.
'அபயக்கரம் கேட்டோர் மேலே
அகண்ட காலால் மிதிக்கலாச்சா
பஞ்சசீலமும் மறந்து போச்சா
காந்தி கைத்தடி துவக்குமாச்சா.."
என ஈழத்துக் கவிஞர்கள் தங்கள் ஏமாற்றத்தைப் பதிவு செய்தனர்.
1970களில் முகிழ்ந்த புதிய தலைமுறையினரே காந்திய வழியின் போதாமையைக் கவனத்தில் கொண்டு மாற்றுவழிகளைக் கண்டடைந்தனர். அம்மாற்று வழியும் பட்டறிவும்கூட வெளியில் இருந்து யாரும் கற்பித்தவை அல்ல.
1965களின் பின்னால் யாழ்ப்பாணக் குடாநாட்டில் எழுச்சி பெற்ற சாதிய எதிர்ப்புப் போராட்டங்களிலும் அதன் பட்டறிவிலும் இருந்தே மாற்றுவழி உருவாக்கம் பெற்றது.
1974 ஆம் ஆண்டில் களப்பலியான பொ.சிவகுமாரன் அம்மாற்று வழியின் முதல் பயணியாவான். மாற்று வழி கண்டறியப்பட்டபோதும் காந்தியம் என்னும் அமைப்பும், அறவழிப்போராட்டக் குழுவும் காந்தியச் சிந்தனையில் செயற்பட்டு வந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.
03.
1983 ஆம் ஆண்டில் நடந்த இனப்படுகொலைதான் ஈழப்போராட்டத்தின் தொடக்கம் என்னும் கருத்து இன்றும் உங்களில் சிலருக்கு இருக்கின்றதோ என்று ஐயுறுகின்றேன்.
அண்மையில் இளம் படைப்பாளி சோமீதரனின் இயக்கத்தில் வெளிவந்த எரியும் நினைவுகள் என்னும் ஆவணப்படம் 1981 ஆம் ஆண்டு நிகழ்வுகள் பற்றிப் பேசுகின்றது. அதனை நீங்கள் பார்த்திருப்பீர்கள் என்றே நம்புகின்றேன். யாழ்பாண நூலகம் எரிக்கபப்பட்ட கதையை பேசும் அந்த ஆவணப்படம் அந்த ஆண்டைச் சுற்றியதான வேறு விடயங்களையும் பேசுகின்றது.
1983 ஆம் ஆண்டுக்கு நிகரான வன்கொடுமை இரண்டாண்டுகளுக்கு முன்னர் 1981 ஆம் ஆண்டில் நிகழ்ந்தது பற்றி காட்சி விபரணத்துடன் பேசுகின்றது. கட்டாயம் பாருங்கள்.
அதற்கும் மூன்றாண்டுகளுக்கு முன்னர் 1977 ஆம் ஆண்டு இடம்பெற்ற வன்கொடுமை பற்றி நீங்கள் அறியாதிருக்கக்கூடும். தமிழ்நாட்டில் எங்களால் வெளியிடப்பட்ட 'லங்காராணி" நாவல் அந்தக் காலகட்டப் பின்னணியில் விரிகின்றது.
தற்போது அது மூன்றாவது பதிப்பாகத் தமிழ்நாட்டில் வெளியிடப்பட்டுள்ளது. இப்படியே பின்னுக்கு பின்னுக்குச் செல்லசெல்ல இந்த ஈழப்பிரச்சனையின் வேர்களை நீங்கள் நன்கு அறிய முடியும். அப்போதுதான் உங்களால் இவை வெறும் அதிகாரப் பரவலாக்கல் பிரச்சனை அல்லவென உணரமுடியும்.
ஆதலால் பின்நோக்கிய சில வரலாற்று விடயங்களை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகின்றேன்.
வெள்ளையரின் ஆட்சிக்காலத்தில் காலத்திற்குக் காலம் இங்கிலாந்திலிருந்து அனுப்பப்பட்ட அறிஞர்களைக் கொண்ட குழுக்கள் இலங்கைக்குத் தேவையான அரசியல் சீர்திருத்தங்களைப் பரிந்துரை செய்தன. இதன்படி 1927 ஆம் ஆண்டில் 'டொனமூர்" என்பவரால் பரிந்துரைக்கப்பட்ட சீர்திருத்தத்தின்படி, பிரதேசவாரி பிரதிநித்துவம் ஒழிக்கப்படு இனவாரி பிரதிநித்துவம் அறிமுகமானது. அதன்பயனாக 1936 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட மந்திரி சபை 'தனிச் சிங்கள மந்திரிசபையாக" பரண் nஐயதிலகாவால் அமைக்கப்பட்டது.
அப்போது பரண் nஐயதிலகா கூறிய கூற்று, கடந்த நூற்றாண்டில் தமிழர்களுக்கெதிராக வெளியிடப்பட்ட இனவெறிக் கருத்துக்களில் மிகவும் மோசமானதும் முதன்மையானதுமாகும். அவர் 'இவ்வமைச்சரவை ஏன் அமைக்கப்படுகிறதென்றால் சிறுபான்மையினராகிய உங்களின் (தமிழர்களின்) தயவின்றி எங்களால் (சிங்களவர்களால்) ஆட்சியமைக்க முடியும்; எங்களுக்கும் திறமையுண்டு; உங்களுக்கு உரிமை வேண்டுமானால் எங்களைக் கேட்டுத்தான் பெறவேண்டும் எனக் காட்டுவதற்குத்தான" எனும் கருத்துப்படக் கூறியுள்ளார்.
பின்னாட்களில் சிறிலங்காவின் பல தலைவர்களும் இத்தொனியில் கருத்துரைத்துள்ளனர். அண்மையில் காலமான சிறிலங்காவின் அதிபராக இருந்த டி.பி.விஐயதுங்கா, சந்திரிகா குமாரதுங்கா போன்றவர்கள் இக்கருத்துக்களை மறுவுருவாக்கம் செய்துள்ளனர்.
கடந்த வாரத்தில் சிறிலங்காவின் இராணுவத்தளபதியும் அவற்றைப் பின்பற்றி திருவாய் மலர்ந்தருளி உள்ளார்.
இலங்கைத் தீவு சுதந்திரம் பெற்ற பத்து மாதத்திற்குள் 19.11.1948 ஆம் ஆண்டில் பெரும்பான்மை அரசால் (சிறிலங்கா) கொண்டு வரப்பட்ட குடியுரிமைச் சட்டத்தின் மூலம் தமிழருள் ஒரு பகுதியினரின் குடியுரிமை மறுக்கப்பட்டது. இதன் மூலம் அவர்கள் நாடற்றவர்களானார்கள். 1947 ஆம் ஆண்டுத் தேர்தலில் 8 உறுப்பினரைப் பாராளுமன்றத்திற்கனுப்பிய மக்கள் இச்சட்டம் கொண்டு வந்ததின்பின் எந்த ஒரு உறுப்பினரையும் அனுப்ப இயலாத நிலை ஏற்பட்டது.
1956 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் 'நாங்கள் வந்தால் 24 மணி நேரத்தில் சிங்களத்தை மட்டும் ஆட்சிமொழியாக்குவோம்" என அறிவித்தனர். அறிவித்ததின் மூலம் ளு.று.சு.னு பண்டாரநாயக்கா தலைமையிலான 'சிறிலங்கா சுதந்திரக் கட்சி" க்கு சிங்களப் பெரும்பான்மை மக்கள் வாக்களித்ததின் மூலம் ஆட்சிக்குக் கொண்டு வந்தனர்.
1956 ஆம் ஆண்டு மே மாதம் ஆட்சிக்கு வந்தவர்கள் சூன் மாதம் தாங்கள் அறிவித்தபடி 'சிங்களம் மட்டும்" எனும் சட்டத்தைக் கொண்டு வந்தனர்.
1958 ஆம் ஆண்டு சனவரியில் இன்னொரு சட்டம் இதே ஆட்சியினரால் கொண்டு வரப்பட்டது. அச்சட்டத்தின்படி வண்டிகளில் பொறிக்கப்படும் எண்ணின் முதலெழுத்து 'ஸ்ரீ" எனச் சிங்களத்தில் குறிப்பிடப்பட்டது.
1949 ஆம் ஆண்டில் ஈழ நிலப்பகுதியான கிழக்குப்பகுதியில் 'கல்லோயா அபிவிருத்தித் திட்டம்" எனும் பெயரில் சிங்களவர் குடியேற்றப்பட்டனர். இதன் மூலம் தமிழரின் நிலப்பகுதியைப் பறிக்கும் படுபாதகமான திட்டம் தொடங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஈழப்பகுதிகளில் அரசு உதவியுடன் சிங்களவர் குடியேற்றப்பட்டனர்.
மேற்படி நடவடிக்கைகள் காரணமாகத் தமிழருக்கும் சிங்களவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பு 1958 ஆம் ஆண்டில் மிகப்பெரும் கலவரமாக உருவானது. பல தமிழர்கள் கொல்லப்பட்டனர். தமிழ்;;ப் பெண்களின் மார்புகளில், தொடைகளில் சி;ங்கள 'சிறி" (ஸ்ரீ) குத்தப்பட்டது. சொத்துக்கள் சூறையாடப்பட்டன.
சிறிலங்காவிலிருந்து தமிழர்கள் ஈழத்தை நோக்கி ஓடி வந்தார்கள். சிறிலங்காவின் தலைநகரான கொழும்பிலிருந்து தமிழர்கள் கப்பலில் அனுப்;பப்பட்டனர்.
நீங்கள் அறிந்திருக்கும் 1983 ஆம் ஆண்டில் மட்டுமல்ல 1977 இல், 1958 இல் எல்லாம் தமிழர்கள் கப்பலில் ஏற்றப்பட்டு யாழ்ப்பாணம் திருக்கோணமலை ஆகிய நகரங்களுக்கு அனுப்பப்பட்டனர். அப்போது ஈழத்தமிழர்களின் தாயகம் எதுவாக இருக்க முடியும். இலங்கைத்தீவின் வடக்கு - கிழக்கு பிரதேசங்கள்தானே.
இன்றைக்கு ஈழப் போராட்டம் ஆயுதப்போராட்டமாக உள்ளதற்கும், அதன் விடுதலை அவாவாக தமிழீழம் தனியரசாக வேண்டுமென்பதற்கும் 1983 ஆம் ஆண்டுதான் காரணம் என்பதல்ல.
ஈழத்தமிழர்களுக்கான தாயகக் கோட்பாடு 1920களில் இருந்தே முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 1977 ஆம் ஆண்டு தேர்தலில் மக்கள் வாக்களித்ததன் மூலம் தமிழர்க்கான தாயக விடுதலைக் கோட்பாடு மக்கள் ஆணை பெற்ற அரசியல் கோரிக்கையாக மாற்றப்பட்டது.
அதுவே இன்றைய தலைமுறையினரிடம் அது கைமாற்றப்பட்டிருக்கின்றது என்பதே உண்மையாகும். அதனையே 1984 ஆம் ஆண்டு திம்புவில் நடந்த பேச்சுவார்த்தையின் போது போராளிகளும் மிதவாத தலைவர்களும் இணைந்து நான்கு அம்சம் கொண்ட கோரிக்கையாக முன்வைத்தனர்.
1970களின் பின்னால் முகிழ்ந்த இப்போராளித் தலைமுறை காந்தியத்தில் நம்பிக்கை இழந்து ஆயுத வழிப் போராட்டத்தில் தங்கள் முன்னோரின் கோரிக்கைக்காக போராடி வருகின்றார்கள்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அப்போராட்டத்திற்கு தலைமை அளித்து போராட்டத்தை நெறிப்படுத்தி வருகிறார்கள். ஈழப்போரட்டத்தின் வெற்றியிலேயே உலகத் தமிழினத்தின் வாழ்வும் வரலாறும் தங்கியுள்ளது. ஏனெனில் வரலாறு என்பதே வெற்றி பெற்றவர்களுக்குத்தான்.
நண்பர்களே,
ஈழப்போராட்டத்திற்கு முன்னுதாரங்கள் எதுவுமில்லை. உலகின் எந்த வல்லாண்மையாளரின் நலன்களுக்காகவும் இப்போராட்டம் முன்னெடுக்கப்படவில்லை.
எங்கள் கால்களில் எங்கள் பலத்திலேயே நாங்கள் தங்கி இருக்கிறோம். நாங்கள் விடுதலை அவாவும், மனித நேயத்தை முன்னிறுத்தும், மற்றவர்கள் உரிமையை மதிக்கும், நட்பை தோழமையையே தேடுகின்றோம். உங்களிடமும் அதனையே எதிர்பார்க்கிறோம். உங்களின் தோளணைவு வெற்றிக்கு இட்டுச் செல்லும்.
நட்புடனும் தோழமையுடனும்
கி.பி.அரவிந்தன்.
02 ஒக். 2008

வன்னியில் உக்கிரமுறும் வான் தாக்குதல்கள்
Posted by எல்லாளன் 9:01 AM
விடுதலைப் புலிகளுக்கு எதிரான அவர்களை ஒழித்துக் கட்டும் போர் முடிவுக்கு வந்துகொண் டிருப்பதாக அரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, அவரது சகோதரரான பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகா உட்பட அரச தரப்பின் உயர்மட்டப் பிரமுகர்கள் பலரும் கடந்த சில நாட்களாக ஆரூடம் ஒன்றைக் கூறிக் கொண்டிருக்கிறார்கள்.
விடுதலைப் புலிகளின் கேந்திரமையமான அவர்களின் அரச நிர்வாகக் கட்டமைப்புகள் அமைந்துள்ள கிளிநொச்சி நகர் மீது, படைநகர்வு பெரிய அளவில் தொடங்கப்பட உள்ளதாக அவர்கள் அடிக்கடி அறிவித்து வந்தார்கள்.
கிளிநொச்சியைக் கைப்பற்றுவதற்கு இன்னும் சிறிது தூரமே உள்ளது. எமது படையினர் கிளிநொச்சியின் கதவைத் தட்டிக் கொண்டிருக்கிறார்கள். எந்த வேளையிலும் படையினர் உள்ளே செல்லலாம். அடுத்த வாரத்தில் கிளிநொச்சியில் கடும் சண்டை மூளும். இவ்வாறு ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமான போர்ப் பேரிகைகளை முழங்கிக் கொண்டி ருந்தனர்.
இவற்றுக்கிடையில் இந்த வாரத்தில் கடுமையான தாக்குதல்கள் கிளிநொச்சியை அண்டி நடை பெறப்போவதாக பாதுகாப்பு விமர்சகர்களும் ஆரூடம் கூறியிருந்தனர்.
அந்தவாறே கிளிநொச்சியில் அரசு பெரும் தாக்குதலைத் தொடங்கி விட்டதாகக் கருதலாம். விடுதலைப் புலிகளின் முகாம்களையும் முக்கிய தளங்களையும் விமானக் குண்டுவீச்சு மூலம் அழித்து வருவதாக அரசாங்கத்தின் அறிக்கைகள் தெரிவிக் கின்றன.
ஆனால் கடந்த சில நாள்களாக கிளிநொச்சியில் விமானத் தாக்குதல்களால் மரணமுறுவோரும் காயப்படுவோரும் பொதுமக்களாகவே இருக்கின்றனர்.
விமானக் குண்டு வீச்சுகளில் பொதுமக்களின் வீடுகளும், ஆலயங்களுமே அழிவதாக சுயாதீனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவை மட்டுமன்றி சர்வதேசத் தொண்டர் அமைப் புகளின் அலுவலகங்களுக்கு சிறிது தொலைவிலும் வைத்தியசாலை போன்ற மனிதாபிமான, மனிதநேயப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் நிறுவனங்களுக்குச் சற்றுத் தொலைவிலும் குண்டுகளும், குண்டுச் சிதறல்களும் விழுகின்றன.
கிளிநொச்சியில் ஏ9 வீதியில், 55ஆம் கட்டை யில் உள்ள செஞ்சிலுவைச் சர்வதேசக் குழுவின் அலுவலகத்திற்குச் சற்றுத் தொலைவில் குண்டு விழுந்திருக்கின்றது. கிளிநொச்சி அரசினர் வைத்தியசாலைக்கு சற்றுத் தொலைவில் போடப்பட்ட குண்டுக ளின் சிதறல்கள் வைத்தியசாலையின் யன்னல் கண்ணாடிகளை நொறுக்கியுள்ளன.
இத்தனைக்கும் மேற்படி இரண்டு நிறுவனங்களும் தாம் மனித நேயப் பணியை மேற்கொள்ளும் நிறுவனங்கள் என்பதனைத் துலாம்பரமாக தெளிவாக தெரியக்கூடியதாக கட்டடக் கூரைகளில் தமது குறிகளை இட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
போர் வேளைகளில் மேற்படி நிறுவனங்கள் தாக்கப்படக் கூடாது, விமானத் தாக்குதல் நடத்தப்படக் கூடாது என்பதற்கான குறியீடுகளே அவை. இது சர்வதேச விதிமுறையுமாகும்.
இவற்றின் மீது தாக்குதல் நடத்துவது எமது நோக்கமல்ல; வேறு இடத்தைக் குறிவைத்து நடத்திய தாக்குதலில் அவை பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று கூறுவதும் எந்த வகையிலும் பொருந்தாது.
போரால் மக்களோ, மக்களுக்கு சேவை செய்யும் நிறுவனங்களோ எந்த வகையிலும் பாதிக்கப்படாமல் இருப்பதை அதில் ஈடுபடும் இரண்டு தரப்புகளும் கவனத்தில் எடுத்து நிதானமாகச் செயற்படுவது அவசியம்; உறுதிப்படுத்துவது பிரதான தேவையாகும்.
அதுவும், விமானத் தாக்குதல் நடத்த உத்தேசித்துள்ள அமைவிடங்கள் வரைபடங்கள் துல்லியமாகக் கண்டறியப்பட்டே அவை நடத்தப்படுவதாக அரசு கூறுவது வழமையான வாய்ப்பாடு.
அவ்வாறிருக்க தாம் இலக்கு வைத்து குறிபார்த்து தாக்குதல் நடத்தும் இடங்களை நுட்பமாக இனங்கண்டு தாக்கும் நவீன வசதிகள் இலங்கை விமானப் படையிடம் இல்லாதிருக்க முடியாது.
ஆகையால், விமானப்படையின் தாக்குதல்க ளால் பொதுமக்களின் வாழ்விடங்களும், பொது இடங்களும் வைத்தியசேவை போன்ற அத்தியா வசிய மற்றும் மனிதாபிமான சேவைகளில் ஈடு படும் நிறுவனங்களும் சேவைகளும் பாதிப்புறு வதை அல்லது தடைப்படுவதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது.
செஞ்சிலுவை, உலக உணவு நிறுவனம், வைத் தியசாலை போன்ற இடங்கள் விமானக் குண்டு வீச்சால் பாதிப்படைவது, அவற்றின் சேவைகளை தடைபண்ணும் நோக்குடன் விடுக்கப்படும் எச்சரிக்கையா?
இத்தகைய சந்தேகம் எழுவதை அரசு தடுக்க இயலாது; மழுப்பவும் முடியாது.
சிங்கள அரசின் நயவஞ்சக திட்டத்தில் கைகோர்த்திருக்கும் இந்தியா: வைகோ கண்டனம்
Posted by எல்லாளன் 8:55 AM
கடந்த இரண்டு ஆண்டுகளாக சிங்கள அரசு நயவஞ்சகமாக முயற்சித்து வரும் சதித்திட்டத்தில் இந்திய அரசுதற்போது கைகோர்த்து உள்ளது என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு இன்று வெள்ளிக்கிழமை (03.10.08) அவர் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது:
தமிழக மீனவர்களைத் தொடர்ந்து சிறிலங்கா கடற்படை தாக்குவதும், சுட்டுக்கொல்வதும் இந்தியக் கடற்படையின் கண்முன்னாலேயே நடைபெற்று வருகையில், தமிழக மக்களையும், மீனவர்களையும், ஏன் இந்திய மக்களையும் திசை திருப்பவும் ஏமாற்றவும், சிங்கள அரசு நயவஞ்சகமாக கடந்த இரண்டு ஆண்டுகளாகவே முயற்சித்து வரும் சதித்திட்டத்தில் இந்திய அரசு தற்போது கைகோர்த்து உள்ளது.
இலங்கையில் தமிழ் இனத்தை அழிக்கும் சிங்கள அரசின் இராணுவ நடவடிக்கைகளுக்கு, இந்தியக் கடற்படையினர் ஏற்கனவே தகவல் பரிமாற்றம் செய்யும் ஒப்பந்தம் மூலம் பல வழிகளிலும் உதவி வருகிற நிலையில், இருநாட்டுக் கடற்படைகளின் கூட்டு சுற்றுக்காவல் என்ற வஞ்சக வலையை சிறிலங்கா அரசு வீசியது.
நேற்றைய நாள் சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகம, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியைச் சந்தித்த பின்பு, மீனவர்கள் தாக்கப்படுவதைத் தடுக்க, இரு நாடுகளின் கூட்டு நடவடிக்கை என்ற திட்டத்தை அறிவித்து உள்ளனர்.
காவலாளியும் கள்வனும் கைகோர்த்துக் கொள்வதுபோல, திருடனுக்கே காவல்துறை உடந்தை ஆவது போல, இந்தத் திட்டத்தை இந்தியா அறிவித்து உள்ளது. ஏற்கனவே இலங்கையில் தமிழ் இனக்கொலை நடத்தும் சிங்கள அரசுக்கு இராணுவ உதவியும், ஆயுதங்களும் செய்து வருகிற இந்தியா, இன்னும் ஒருபடி மேலே சென்று, தமிழ் இனப்படுகொலையைத் தீவிரப்படுத்த சிறிலங்கா அரசுக்கு வெளிப்படையாகவே உதவத் துணிந்து விட்டது.
எந்தக் காரணத்தை முன்னிட்டும் கூட்டு நடவடிக்கை கூடாது. ஆட்டுத்தோலைப் போர்த்திய ஓநாயின் திட்டம்தான், சிறிலங்கா முன்வைத்து உள்ள திட்டம் ஆகும். இந்திய அரசின் நடவடிக்கையை, மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் சார்பில் வன்மையாகக் கண்டிப்பதுடன், இந்தத் திட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யூனிசெஃப் அலுவலகம், பெண்கள் அபிவிருத்தி புனர்வாழ்வு நிறுவனம் மீதும் வான்குண்டுத் தாக்குதல்
Posted by எல்லாளன் 8:52 AM
கிளிநொச்சி கணேசபுரத்தில் உள்ள யுனிசெஃப் அலுவலகம் அதன் அருகாக உள்ள மக்கள் குடியிருப்புக்கள் மற்றும் பெண்கள் அபிவிருத்தி புனர்வாழ்வு நிறுவனம் என்பனவும் சிறிலங்கா வான்படையின் குண்டுத்தாக்குதலில் அழிந்தும் சேதமாகியும் உள்ளன.

அத்துடன் ஜெயந்தி நகரில் உள்ள கத்தோலிக்க திருச்சபையின் ஒப்ரெக் கல்வி நிறுவனம் மற்றும் வெற்றிமனை பெண்கள் உளவளத்துணை நிறுவனம் மீதும் சிறிலங்கா வான்படை இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் குண்டுத்தாக்குதலை நடத்தியுள்ளது.
இதில் அப்பணிமனையின் கட்டடங்கள் சேதமாகியுள்ளன.
சிறிலங்கா வான்படையின் குண்டுத்தாக்குதலில் தமிழீழ காவல்துறை நடுவப் பணியகம் அழிப்பு
Posted by எல்லாளன் 8:50 AM
சிறிலங்கா வான்படையின் வானூர்திகள் நடத்திய குண்டுத்தாக்குதலில் தழிழீழ காவல்துறை நடுவப்பணியகம் மற்றும் தமிழர் புனர்வாழ்வுக் கழக துணைப் பணிமனை என்பன அழிக்கப்பட்டுள்ளன.
கிளிநொச்சியில் உள்ள தமிழீழ காவல்துறை நடுவப்பணிமனை அதன் அருகாக உள்ள தமிழர் புனர்வாழ்வுக் கழக துணைப் பணிமனை, வணிக நிறுவனங்கள், கிளிநொச்சி தபாலகம் மற்றும் மக்கள் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா வான்படையின் வானூர்திகள் குண்டுத்தாக்குதலை நடத்தியுள்ளன.
இப்பணிமனைகள் மீது இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் 9:30 நிமிடமளவில் நான்கு தடவைகள் சிறிலங்கா வான்படையின் மிகையொலிவேகத்தாக்குதல் வானூர்திகள் தாக்குதலை நடத்தின.
இதில் காவல்துறை நடுவப்பணிமனை, அதன் அருகாக உள்ள வணிக நிலையங்கள், தமிழர் புனர்வாழ்வுக் கழக துணைப் பணிமனை, வணிக நிலையங்கள், உணவகங்கள் என்பன அழிந்துள்ளன. கிளிநொச்சி தபாலகம் சேதமாகியுள்ளது.
மீண்டும் இன்று பிற்பகல் 2:00 மணியளவில் காவல்துறை நடுவப் பணியகம் மீது வானூர்திகள் நடத்திய தாக்குதலில் ஏலவே சிதைந்த பகுதிகள் மேலும் சிதைந்துள்ளன.
வானூர்திகள் முற்பகல் 9:30 நிமிடமளவில் நடத்திய தாக்குதலின் போது போது முதன்மை வீதி வழியாக சென்று கொண்டிருந்த ஏழு பேர் காயமடைந்துள்ளனர்.
சிறீகாந்தகரன் கருணன் (வயது 23)
தேவராசா மகிந்தன் (வயது 21)
தங்கராசா சயந்தன் (வயது 31)
முத்துலிங்கம் தவராசா (வயது 47)
சிவகுரு மனோகரலிங்கம் (வயது 43)
பொன்னுத்துரை மங்களேஸ்வரி (வயது 64)
மகேந்திரன் கனிஸ்டன் (வயது 13)
ஆகியோர் காயமடைந்தனர்.
சிறிலங்கா வான்படை நடத்திய குண்டுத் தாக்குதலின் சிதறல்கள் கிளிநொச்சியில் உள்ள மல்லாவி மருத்துவமனை வளாகத்துள்ளும் வீழ்ந்துள்ளன.
தமிழீழ அரசியல்துறை நடுவப்பணிமனை மற்றும் சமாதான செயலகம் ஆகியவற்றுக்கு நேற்று குண்டுவீசி அழித்த சிறிலங்கா அரசு வெளிப்படையாக மக்கள் மத்தியில் இயங்கிவரும் தமிழீழ குடிசார் நிர்வாக மையங்களை தாக்கி அழிக்கும் நடவடிக்கைகளை தற்போது அன்றாடப்பணியாக மேற்கொண்டு வருகின்றது.